NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இரண்டு முக்கிய வசதிகளுடன் வெளியாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன்களுக்கான IOS 17.3 அப்டேட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டு முக்கிய வசதிகளுடன் வெளியாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன்களுக்கான IOS 17.3 அப்டேட்
    இரண்டு முக்கிய வசதிகளுடன் வெளியாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன்களுக்கான IOS 17.3 அப்டேட்

    இரண்டு முக்கிய வசதிகளுடன் வெளியாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன்களுக்கான IOS 17.3 அப்டேட்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 16, 2023
    12:39 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான ஐஓஎஸ் 17-ஐ வெளியிட்டது ஆப்பிள். அந்த இயங்குதளத்திற்கு, கடந்த மூன்று மாதங்களில் இரண்டு அப்டேட்களை அந்நிறுவனம் வழங்கியிருக்கும் நிலையில், மூன்றாவது அப்டேட்டின் பீட்டா சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

    பீட்டா சோதனைக்குப் பிறகு, அடுத்த மாதம் புதிய ஐஓஎஸ் 17.3 அப்டேட்டை அனைத்து ஆப்பிள் பயனாளர்களுக்கும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐஓஎஸ் 17 இயங்குதளத்தின் இரண்டாவது அப்டேட்டான ஐஓஎஸ் 17.2-விலேயே தான் வழங்கத் திட்டமிட்டிருந்த பெரும்பாலான வசதிகளை ஆப்பிள் அறிமுகப்படுத்திவிட்டது.

    எனினும், அதில் கொடுக்கப்படாத இரண்டு புதிய வசதிகளை, பாதுகாப்பு அப்டேட்களுடன் சேர்த்து இந்தப் புதிய ஐஓஎஸ் 17.3 அப்டேட்டில் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது ஆப்பிள்.

    ஆப்பிள்

    ஐஓஎஸ் 17.3 அப்டேட்டில் வழங்கப்படவிருக்கும் இரண்டு வசதிகள்: 

    முதலாவதாக, திருடப்படும் ஐபோன்களில் உள்ள தகவல்களைத் திருடி அதன் மூலம் பயனாளர்களிடமிருந்து பணம் திருடுவதைத் தடுக்கும் வகையில் Stolen Device Protection என்ற வசதியைப் புதிய அப்டேட்டில் வழங்கவிருக்கிறது ஆப்பிள்.

    இதன் மூலம், ஒரு ஐபோன் திருடப்பட்டாலும், அதில் முக்கியமாக தகவல்கள் அடங்கிய பகுதிகளை பயோமெட்ரிக் தகவல்கள் (கைரேகை மற்றும் முக அடையாளம்) இன்றி அணுக முடியாத வகையில் வடிவமைத்திருக்கிறது ஆப்பிள்.

    இரண்டாவது, ஆப்பிள் மியூசிக் சேவையில் collaborative playlists வசதியை இந்த ஐஓஎஸ் 17.3 அப்டேட்டில் வழங்கவிருக்கிறது ஆப்பிள். இந்த வசதியை ஐஓஎஸ் 17.2 அப்டேட்டிலேயே அந்நிறுவனம் வழங்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அப்டேட்டில் இந்த collaborative playlists வசதியை அந்நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    ஐபோன்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    ஆப்பிள்

    ஆப்பிளின் வாட்ச்ஓஎஸ் 10 ஐப் பயன்படுத்தி உங்கள் மனநலனை பேணுவது எப்படி? ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிள் பயனாளர்களுக்கு 'அதிதீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை' வழங்கிய CERT-In அமைப்பு ஆப்பிள் தயாரிப்புகள்
    இந்தியாவில் MRP-யை விட கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் புதிய ஐபோன்15 ஐபோன்
    அதிக ரேஞ்சை கொண்ட U2 சிப்பை ஐபோன் 15ல் பயன்படுத்தியிருக்கும் ஆப்பிள்  ஐபோன்

    ஐபோன்

    இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான் ஆப்பிள்
    சார்ஜ் ஆகும் ஐபோன் அருகே தூங்க வேண்டாம் என எச்சரித்திருக்கும் ஆப்பிள் ஆப்பிள்
    ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது ஆப்பிள்
    செப்டம்பர் 12ல் வெளியாகிறது புதிய ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025