இன்று முதல் இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன்15 விற்பனை துவங்குகிறது
கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தங்களுடைய வருடாந்திர ஐபோன் வெளியீட்டு நிகழ்வில், இந்தாண்டிற்கான புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். இதன் விற்பனை, இந்தியாவில் இன்று (செப்டம்பர் 22) முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, நாட்டில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடைகளில், காலை முதல் மக்கள் வரிசையில் காத்து நிற்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரூ.80,000 விலையில் தொடங்கும் ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை, அதிபட்சமாக 15 ப்ரோ மேக்ஸூக்கு ரூ.1.6 லட்சம் வரையிலான விலை வரை இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஐபோன் 15 சீரிஸின் கீழ் நான்கு புதிய ஐபோன்கள் மற்றும் இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிட்டது அந்நிறுவனம்.