NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஐபோன் 16 சீரிஸின் அடிப்படை வேரியன்ட்களிலும் ஆக்ஷன் பட்டனை வழங்கவிருக்கும் ஆப்பிள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபோன் 16 சீரிஸின் அடிப்படை வேரியன்ட்களிலும் ஆக்ஷன் பட்டனை வழங்கவிருக்கும் ஆப்பிள்
    ஐபோன் 16 சீரிஸின் அடிப்படை வேரியன்ட்களிலும் ஆக்ஷன் பட்டனை வழங்கவிருக்கும் ஆப்பிள்

    ஐபோன் 16 சீரிஸின் அடிப்படை வேரியன்ட்களிலும் ஆக்ஷன் பட்டனை வழங்கவிருக்கும் ஆப்பிள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 02, 2023
    10:48 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். நான்கு வேரியன்ட்களாக இந்தப் புதிய ஐபோன் 15 சீரிஸ் போன்கள் வெளியாகியிருந்தன.

    முந்தைய ஐபோன்களில் கொடுக்கப்பட்டு வந்த ம்யூட் ஸ்விட்ச்சுக்குப் பதிலாக ஆக்ஷன் பட்டனை இந்த 15 சீரிஸின் ப்ரோ மாடல்களில் கொடுத்தது ஆப்பிள்.

    15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டும் கொடுக்கப்பட்ட இந்த ஆக்ஷன் பட்டனை, அடுத்து அறிமுகப்படுத்தவிருக்கும் 16 சீரிஸின் அடிப்படை மாடல்களிலேயே கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது ஆப்பிள்.

    முந்தைய ப்ரோ மாடல்களில் கொடுத்த ப்ரீமியம் வசதிகளை, அடுத்த அடிப்படை மாடல்களில் வழங்குவது ஆப்பிளின் வழக்கம் தான். அதையே இந்த வசதிக்கும் கடைப்பிடித்திருக்கிறது அந்நிறுவனம்.

    ஆப்பிள்

    ஆப்பிளின் ஆக்ஷன் பட்டன்: 

    முந்தைய ஐபோன்களில் கொடுக்கப்பட்டு வந்த ம்யூட் ஸ்விட்டானது, ஐபோனின் ரிங்கிங் தேர்வுகளை மாற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

    அதற்கு பதிலாக மாற்றப்பட்ட ஆக்ஷன் பட்டனானது, சைலன்ட் மோடு, பிளாஷ் லைட், கேமரா, வாய்ஸ் மெமோ, ஷார்ட் கட்ஸ், மேக்னிஃபையர் மற்றும் டிரான்ஸ்லேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பயனர்கள் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    15 சீரிஸின் ப்ரோ மாடலில் மெக்கானிக்கலாகக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்ஷன் பட்டனை, 16 சீரிஸில் கேப்பாசிட்டிவ் டைப் பட்டனாகவும் வழங்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    பழைய ஐபோன்களில் கொடுக்கப்பட்ட டச் ஐடி ஹோம் பட்டனைப் போல புதிய ஆக்ஷன் பட்டன் அமையலாம் எனக் கூறப்படுகிறது.

    ஆப்பிள்

    ஐபோன் SE-யிலும் ஆக்ஷன் பட்டன: 

    ஐபோன் 16 சீரிஸ் மட்டுமின்றி, ஆப்பிளின் பட்ஜெட் போனான அடுத்த தலைமுறை ஐபோன் SE மாடலிலும் இந்த ஆக்ஷன் பட்டனைக் கொடுக்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    2025ம் ஆண்டு வெளியிடப்படவிருக்கும் நான்காம் தலைமுறை ஐபோன் SE-யில் ஆப்பிள் ஆக்ஷன் பட்டனை வழங்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

    15 சீரிஸின் ப்ரோ மாடல்களில் கொடுக்கப்பட்ட ஆக்ஷன் பட்டனை சில ஆப்பிள் வாடிக்கையாளர்கள் அன்லைக்கும் செய்திருக்கிறார்கள். ம்யூட் பட்டனை பயன்படுத்தி பழக்கப்பட்ட அவர்களுக்கு பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய புதிய ஆக்ஷன் பட்டன் மனநிறைவைத் தரவில்லை.

    எனினும், தங்களுடைய புதிய அறிமுகமான ஆக்ஷன் பட்டனில் பல்வேறு வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    ஐபோன்
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆப்பிள்

    இனி குறைவான விலையிலேயே ஐபோன்கள் பின்பக்க கண்ணாடி அமைப்பை மாற்றலாம், எப்படி? ஐபோன்
    இன்று வெளியாகிறது ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான புதிய இயங்குதள அப்டேட் ஆப்பிள் தயாரிப்புகள்
    ஏன் ஐபோன்களுடன் ஆப்பிள்கேர்+ திட்டத்தையும் சேர்த்து வாங்க வேண்டும்? ஐபோன்
    இன்று முதல் இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன்15 விற்பனை துவங்குகிறது ஆப்பிள் தயாரிப்புகள்

    ஐபோன்

    அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது ரஷ்யா ரஷ்யா
    ரூ.1.30 கோடிக்கு ஏலம் போன ஆப்பிளின் முதல் ஐபோன் மாடல் ஆப்பிள்
    எப்போது அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்? என்னென்ன வசதிகள்? ஆப்பிள்
    இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான் ஆப்பிள்

    ஸ்மார்ட்போன்

    வெளியான சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்த 'இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30' ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ்
    இந்தியாவில் புதிய C51 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ரியல்மி ரியல்மி
    இந்தியாவில் 'ஹானர் 90' ஸ்மார்ட்போன் வெளியீடு மூலம் மீண்டும் கால்பதிக்கும் ஹானர் கேட்ஜட்ஸ்
    இன்று உங்கள் தொலைபேசியில் அவசர எச்சரிக்கை வந்ததா? இதோ அதன் அர்த்தம் ஆண்ட்ராய்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025