NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எதிர்க்கட்சி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விளக்கமளிக்க இந்தியா வரும் ஆப்பிள் குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    எதிர்க்கட்சி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விளக்கமளிக்க இந்தியா வரும் ஆப்பிள் குழு
    எதிர்க்கட்சி ஒட்டுக்கேட்பு எச்சரிக்கை செய்தி தொடர்பாக விளக்கமளிக்க இந்தியா வரும் ஆப்பிள் குழு

    எதிர்க்கட்சி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விளக்கமளிக்க இந்தியா வரும் ஆப்பிள் குழு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 26, 2023
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் ஐபோன்களை அரசுத் தரப்பு ஒட்டுக்கேட்க முயற்சி செய்வதாகக் கடந்த மாதம் அவர்களுக்கு ஐபோன்கள் மூலமாகவே எச்சரிக்கை செய்தி அனுப்பியிருந்தது அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்.

    இந்த பிரச்சினை இந்தியாவில் பல்வேறு தரப்பிலும் அதிர்சியையும் கண்டனங்களையும் எழுப்பியது. காங்கிரஸ் மட்டுமல்லாது, ஆம் ஆத்மி, சிபிஐ(எம்) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களின் ஐபோன்களுக்கும் எச்சரிக்கை செய்தியை அனுப்பியிருக்கிறது ஆப்பிள்.

    ஆப்பிளின் இந்த நடவடிக்கை குறித்து இந்தியாவிற்கு வந்து விளக்கமளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கணினி மற்றும் இணையப் பிரச்சினைகளுக்கான பேரிடர் தடுப்புக் குழு (CERT-In).

    ஆப்பிள்

    இந்தியா வரும் ஆப்பிள் நிர்வாகிகள்: 

    CERT-In-ன் இந்த நோட்டீஸை முன்னிட்டு, ஆப்பிள் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்தியாவிற்கு வந்து CERT-In அமைப்பிடம் விளக்கமளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், அடுத்த சில நாட்களிலேயே ஆப்பிள் நிர்வாகிகள் குழு இந்தியாவை வந்தடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனமானது இந்திய வந்து தங்களது செயல்பாடுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை துணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

    ஆப்பிள் விளக்கமளிப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் குறித்து கேட்கப்பட்டதற்கு, அதுகுறித்த முறையான தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    இந்தியா
    அரசியல் நிகழ்வு
    ஐபோன்

    சமீபத்திய

    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை

    ஆப்பிள்

    ஒரு மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்த புதிய 15 சீரிஸ் ஐபோன்கள் ஆப்பிள் தயாரிப்புகள்
    IOS 17 இயங்குதள அப்டேட்டைப் பெறும் ஆப்பிள் ஐபோன்கள் ஐபோன்
    இனி குறைவான விலையிலேயே ஐபோன்கள் பின்பக்க கண்ணாடி அமைப்பை மாற்றலாம், எப்படி? ஐபோன்
    இன்று வெளியாகிறது ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான புதிய இயங்குதள அப்டேட் ஆப்பிள் தயாரிப்புகள்

    இந்தியா

    தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார் தமிழ்நாடு
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் மும்பை
    செபியிடம் உள்ள ரூ.25,000 கோடி சஹாரா முதலீட்டாளர்கள் நிதியானது யாரைச் சேரும்? வணிகம்
    உலக தொலைக்காட்சி தினம் இன்று; எதற்காகக் கொண்டாடப்படுகிறது? உலகம்

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா

    ஐபோன்

    M3 சிப்செட்டைக் கொண்ட புதிய 'மேக்' மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கும் ஆப்பிள் ஆப்பிள்
    அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது ரஷ்யா ரஷ்யா
    ரூ.1.30 கோடிக்கு ஏலம் போன ஆப்பிளின் முதல் ஐபோன் மாடல் ஆப்பிள்
    எப்போது அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ்? என்னென்ன வசதிகள்? ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025