
பழுதான ஐபோன் 13 மாடலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு பெற்ற ஆப்பிள் வாடிக்கையாளர்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரூவைச் சேர்ந்த 30 வயாதன அவெஸ் கான் என்பவர் 2021ம் ஆண்டு அக்டோபரில் புதிய ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியிருக்கிறார். வாங்கிய சில மாதங்களிலேயே, அந்த ஐபோனின் பேட்டரி மற்றும் ஸ்பீக்கரில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டிருக்கிறது.
அவர் வாங்கிய ஐபோன் 13 மாடலானது ஒரு வருட வாரண்டியுடன் விற்பனை செய்யப்பட்டதால், மேற்கூறிய பிரச்சினைகளை சரி செய்ய 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திரா நகரில் உள்ள ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியிருக்கிறார்.
அவெஸூடைய ஐபோன் 13ல் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய முடியும் என்று ஒரு வாரத்தில் அவரது போனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சேவை மையத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆப்பிள்
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு:
ஒரு வாரத்திற்கு பின்பும் அவருடைய போன் சரியாக வேலை செய்யாததைத் தொடர்ந்து மீண்டும் சேவை மையத்தில் கொடுத்திருக்கிறார். பின்பு பல வாரங்கள் கழித்து, அந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட பிரச்சினை இருப்பதாகவும் அது வாரண்டியின் கீழ் வராது எனவும் சேவை மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக அறிக்கை அனுப்பியிருக்கிறார். அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படாததைத் தொடர்ந்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அவெஸ் கானுக்கு ரூ.79,900 ரூபாயுடன், அதற்கான வட்டியாக ரூ.20,000 சேர்த்து ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.