டிசம்பரில் வெளியாகவிருக்கும் IOS 17.2 இயங்குதள அப்டேட்டில் என்ன ஸ்பெஷல்?
கடந்த செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் 15 சீரிஸின் வெளியீட்டுடன், ஐபோன்களுக்கான புதிய ஐஓஎஸ் 17 இயங்குதளத்தையும் வெளியிட்டது ஆப்பிள். அந்த இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்டாக ஐஓஎஸ் 17.2 அப்டேட்டை அனைத்து பயனாளர்களுக்கும் வரும் டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். அந்த அப்டேட்டில் பயனுள்ள மற்றும் கவனிக்கத்தக்க சில புதிய வசதிகள் மற்றும் செயலிகளை ஆப்பிள் பயனாளர்களுக்காக உருவாக்கியிருக்கிறது ஆப்பிள். கூகுள் கீப்பைப் போல புதிய ஜர்னலிங் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஆட்டோமேட்டிக் டேட்டிங், புக்மார்க்கிங் மற்றும் அட்டவனைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த செயலியை ஐஓஎஸ் 17.2 இயங்குதள அப்டேட்டில் வெளியிடவிருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிளின் ஐஓஎஸ் 17.2 அப்டேட்:
ஸ்பாட்டிஃபையில் இருக்கும் சில வசதிகளை புதிய இயங்குதள அப்டேட் மூலம் ஐஓஎஸ்ஸிலும் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஆப்பிள். அதில், நண்பர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் வகையிலான மியூசிக் பிளேலிஸ்ட் மற்றும் குறிப்பிட்ட பயனர் அதிகம் கேட்கக்கூடிய பாடல்களைக் கொண்ட பிளேலிஸ்ட் உள்ளிட்டவை அடக்கம். விட்ஜெட் மூலம் அல்லாமல் ஹோம் ஸ்கிரீனிலேயே பல்வேறு வானிலை தகவல்களைக் காட்டும் வகையில் வானிலை அப்டேட்டையும் கொண்டி அறிமுகமாகவிருக்கிறது ஐஓஎஸ் 17.2. ஐமெஸேஜ் சேவை முதல் தொடர்புகளுடன் தகவல் பகிர்வின் போது, பாதுகாப்பாக இருக்க 'கான்டேக்ட் கீ வெரிஃபிகேஷன்' என்ற பாதுகாப்பு வசதியை புதிய இயங்குதள அப்டேட்டுடன் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஆப்பிள். இதைத் தவிர இன்னும் பல சுவாரஸ்ய அறிமுகங்களையும் புதிய ஐஓஎஸ் 17.2 அப்டேட்டில் ஆப்பிள் பயனாளர்கள் எதிர்பார்க்கலாம்.