NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் ஐபோன் கேமரா தயாரிப்பிற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ள ஆப்பிள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஐபோன் கேமரா தயாரிப்பிற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ள ஆப்பிள்
    ஐபோனின் கேமரா தொகுதிகளுக்காக இந்திய சப்ளையர்கள் யாரையும் இதுவரை ஆப்பிள் ஈடுபடுத்தியதில்லை

    இந்தியாவில் ஐபோன் கேமரா தயாரிப்பிற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ள ஆப்பிள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2024
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் முக்கிய ஐபோன் உதிரிபாகங்களை, குறிப்பாக கேமரா மாட்யூல்களை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    தொழில்நுட்ப நிறுவனமான டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்துடனும், சென்னையின் முருகப்பா குழுமத்துடனும் இந்த உதிரிபாகங்களின் சாத்தியமான அசெம்பிளி மற்றும் உற்பத்திக்காக பேசிவருவதாக கூறப்படுகிறது.

    ஐபோனின் கேமரா தொகுதிகளுக்காக இந்திய சப்ளையர்கள் யாரையும் இதுவரை ஆப்பிள் ஈடுபடுத்தியதில்லை. அதனால், இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

    இந்த பேச்சுவார்த்தைகள், ஆப்பிள் அதன் 'சீனா பிளஸ் ஒன் கொள்கையை' பின்பற்றி, அதன் விநியோகச் சங்கிலி மற்றும் கூறு உற்பத்திக்காக சீனாவை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது என்ற பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.

    மூலோபாய மாற்றம்

    சீனாவை மட்டுமே அண்டி இருக்கக்கூடாது என யோசிக்கும் ஆப்பிள்

    அடுத்த சில மாதங்களுக்குள் டைட்டன் அல்லது முருகப்பா குழுமத்தினை தனது விருப்பமான பார்ட்னராக ஆப்பிள் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டைட்டன், முருகப்பா குரூப் ஆகியவை அவற்றின் உயர் துல்லியமான உற்பத்தித் திறன்களுக்காக அறியப்படுகின்றன.

    முருகப்பா குழுமம் 2022இல் Moshine Electronicsஇல் கணிசமான பங்குகளை வாங்கியதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் தனது இருப்பை விரிவுபடுத்தியது.

    இதேபோல், டைட்டன் நிறுவனம் அதன் துணை நிறுவனமான டைட்டன் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் வலுவான சாதனைப் பதிவை நிரூபித்துள்ளது.

    உள்ளூர் உற்பத்தியானது ஆப்பிளுக்கு கணிசமான அளவு செலவுகளை கட்டுப்படுத்தும் அதே வேளையில் சீன சப்ளையர்களை சார்ந்திருப்பதை குறைக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிள் நிறுவனம்
    ஐபோன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆப்பிள்

    புதிய AI கட்டமைப்பு மற்றும் கருவிகளை உருவாக்கி வரும் ஆப்பிள் செயற்கை நுண்ணறிவு
    M3 சிப்புடன் கூடிய புதிய ஐமேக் மற்றும் மேக்புக் ப்ரோவை அறிமுகம் செய்யும் ஆப்பிள்? ஆப்பிள் தயாரிப்புகள்
    ஐபோன் 15ஐ பாதிக்கின்றனவா, BMW மற்றும் டொயோட்டா நிறுவன கார்களில் உள்ள வயர்லெஸ் சார்ஜர்கள்? ஐபோன்
    சர்வதேச சந்தைக்காக இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் டாடா: வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு  ஐபோன்

    ஆப்பிள் தயாரிப்புகள்

    ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் சாதனங்களின் இயங்குதளங்களுக்கான அப்டேட்கள்? ஆப்பிள்
    ஆப்பிள் WWDC 2023: அறிமுகமானது புதிய "விஷன் ப்ரோ" AR ஹெட்செட்! ஆப்பிள்
    ஆப்பிள் WWDC 2023: IOS 17 இயங்குதளம்.. எப்போது வெளியீடு? ஆப்பிள்
    ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதிகள் என்னென்ன? ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம்

    திடீரென ஐபோன் IOS-16 Live Wallpaper-ஐ நீக்கிய ஆப்பிள் - காரணம் என்ன? ஐபோன்
    OpenAI உடன் இணையும் முன்னாள் ஆப்பிள் குழு - நோக்கம் என்ன? ஆப்பிள்
    ஆப்பிள் ஐபோன் iOS 16 ஒளிந்திருக்கும் அம்சங்கள் - என்னென்ன? ஐபோன்
    பணிநீக்கத்தை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் இவற்றை எல்லாம் செய்கிறது ஆப்பிள்

    ஐபோன்

    செப். 18ல் வெளியாகும் ஆப்பிள் சாதன இயங்குதளங்கள் மற்றும் ஆப்பிளின் பிற அப்டேட்கள் ஆப்பிள்
    கூடுதலான கதிர்வீச்சை வெளியிடும் ஐபோன் 12, விற்பனையை நிறுத்த உத்தரவிட்ட பிரான்ஸ் ஆப்பிள்
    ஐபோன் 12 கதிர்வீச்சு அளவுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு ஊழியர்களிடம் ஆப்பிள் அறிவுறுத்தல்  ஆப்பிள்
    ஒரு மணி நேரத்திலே விற்றுத் தீர்ந்த புதிய 15 சீரிஸ் ஐபோன்கள் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025