Page Loader
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூர்ந்த டிம் குக்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூர்ந்த டிம் குக்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூர்ந்த டிம் குக்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 06, 2023
01:12 pm

செய்தி முன்னோட்டம்

உலகளவில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஆப்பிள். அந்த நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவு தினம் அக்டோபர் 5. 12 ஆண்டுகளுக்கு முன் 2011-ம் ஆண்டு கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கும் மேலாக அதனுடன் போராடி, இறுதியில் எந்த சிகிச்சையும் பலனளிக்காமல், தன்னுடைய 56 வயதில் உயிரிழந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். தற்போது உலகவில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு முன்னோடியான முதல் ஐபோனை 2007ம் ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட போது இவரே அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். முதன் முதலில் ஐபோன் அந்த வடிவம் பெற்றதில் ஸ்டீவ் ஜாப்ஸின் பங்கு முக்கியமானது. மேலும், முதல் ஐபோன் வெளியீட்டு நிகழ்வை இப்போதும் பல்லாயிரம் கோடி மக்கள் யூடியூபில் பார்வையிட்டு வருகிறார்கள்.

ஆப்பிள்

ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்த பதிவிட்ட டிம் குக்: 

ஆப்பிளின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் நினைவு நாளான நேற்று, அவரைக் குறித்து ஆப்பிளின் இந்நாள் தலைமை செயல் அதிகாரியும், அவரது உற்ற நண்பருமான டிம் குக் எக்ஸ் தளத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "மரபுகளுக்கு சவால் விடுத்து, புதுமைகளை முன்னெடுத்து, இந்த உலகை மாற்றிய, தொலை நோக்குப் பார்வை கொண்ட என்னுடைய வழிகாட்டியும் நண்பருமான ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூர்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூர்வதற்காகவே தங்கள் வலைத்தளத்தில் தனி பக்கத்தினையும் அளித்திருக்கிறது ஆப்பிள். ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து நினைவு கூறுபவர்களின் கருத்துக்களை அந்தப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

embed

ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்த டிம் குக்கின் எக்ஸ் பதிவு:

Thinking back on a pioneer who challenged conventions, a visionary who changed the world, a mentor, and a friend. We miss you, Steve. pic.twitter.com/rKn6mBHecI— Tim Cook (@tim_cook) October 5, 2023