ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்களுக்கு கூகுள் தனியுரிமை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஏன்?
ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்கள் குறித்து அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூகுளின் ஜெமினி ஆப் பிரைவசி ஹப் வலைப்பதிவு மூலம், கூகிள் நிறுவனம், ஜெமினி பயன்பாடுகளில் எந்தவொரு உரையாடலின் போதும் தங்கள் ரகசியத் தகவலை உள்ளிடுவதைத் தவிர்க்குமாறு வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது. ஜெமினி ஆப்ஸ் என்பது சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் போன்றது. வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டது போல, "உங்கள் உரையாடல்களில் ரகசியத் தகவலை உள்ளிட வேண்டாம் அல்லது மதிப்பாய்வாளர் பார்க்க விரும்பாத தரவு அல்லது எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்களை மேம்படுத்த Google பயன்படுத்த வேண்டாம்."
வலைப்பதிவில் கூகுள் கூறுவது என்ன?
அந்த பதிவில், தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளது கூகுள். எந்தவொரு உரையாடலும் மதிப்பாய்வு செய்யப்பட்டவுடன், நீங்கள் ஜெமினி ஆப்ஸ் செயல்பாட்டை நீக்கிய பிறகும், குறிப்பிட்ட காலத்திற்கு அவை அகற்றப்படாது. எந்த பயனரின் Google கணக்கிலும் இணைக்கப்படாமல், உரையாடல்கள் தனித்தனியாக வைக்கப்படுவதே இதற்கு காரணம். கூடுதலாக, ரகசியத் தகவலை உள்ளடக்கிய உரையாடல்கள் மூன்று ஆண்டுகள் வரை தக்கவைக்கப்படும் என்று கூறுகிறது கூகுள். அதனால், உங்கள் மொழி, சாதன வகை, இருப்பிடத் தகவல் போன்ற தொடர்புடைய தரவுகளை பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஜெமினி ஆப்ஸ் செயல்பாடு முடக்கப்பட்ட பிறகும், பயனரின் உரையாடல் 72 மணிநேரம் வரை அவர்களது கணக்கில் சேமிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.