இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
நாடாளுமன்ற முடக்கம்: 24 மணி நேர விவாதத்திற்கு அமித் ஷா அழைப்பு! ராகுல் காந்தி நிராகரிப்பு
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொடர்ந்து நீடித்து வரும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, எதிர்க்கட்சிகள் கோரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார் எனக் கூறி, 24 மணி நேரத் தொடர் விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 13) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரியா? இதோ உண்மை நிலவரம்
சென்னையில் பல வீடுகளுக்கு சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்து வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
பெண்களுக்கான அரசியல் இடம் சலுகை அல்ல, உரிமை: சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான மற்றும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று முன்மொழிந்தார்.
பெங்களூரில் Zepto நிறுவனத்தின் கிடங்கு பூட்டி சீல்: கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
உணவு பொருட்களைச் சேமித்து வைப்பதிலும், லேபிளிடுதல் மற்றும் கையாளுதலிலும் விதிகளை மீறியதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், கர்நாடக மாநில உணவுப் பாதுகாப்புத் துறையின் சிறப்பு ஆய்வுக் குழு பெங்களூரு ஹொஸ்கோடே பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல ஜெப்டோ நிறுவனத்தின் கிடங்கை பூட்டி சீல் வைத்துள்ளது.
ஏர் இந்தியா விமானிக்கு போதை பரிசோதனையில் வெளியான உண்மை: தாய்லாந்து -டெல்லி விமான விபத்து விசாரணையில் அம்பலம்
பூக்கெட் நகரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா ஏஐ2379 விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே சரிந்து 24 பேர் காயமடைந்த சம்பவத்தில், அந்த விமானத்தின் தலைமை விமானிக்கு நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லோக்சபாவில் விவாதமின்றி 2 மசோதாக்கள் நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்துத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், லோக்சபாவில் இன்று மேலும் இரு மசோதாக்கள் விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நேதாஜியின் அஸ்தியை திரும்ப கோரும் மகள்; மத்திய அரசின் பதிலை கேட்கும் உச்ச நீதிமன்றம்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா பி. பஃப் தாக்கல் செய்த மனு மீது, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கையை நடத்த வலியுறுத்தித் தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் இலவச WiFi வசதி: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மீண்டும் தொடக்கம்
சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில், பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 32 இலவச Wi-Fi மையங்கள் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை: ₹264 கோடி நிதியுடன் 65 படைகள் அமைப்பு
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக வேரறுக்கும் நோக்கில், ₹264 கோடி நிதியியக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப் படைகளை அமைத்து முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நடுவானில் 300 அடி சட்டென சரிந்த ஏர் இந்தியா விமானம்: தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என சந்தேகம்
ஆகஸ்ட் 4 அன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று திடீரென 300 அடி உயரத்தில் இருந்து கீழே சரிந்து விழுந்ததில், 17 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
4 பிள்ளைகளை வளர்த்து என்ன பயன்? உடலைக் எடுக்கக்கூட வராத பிள்ளைகள்; போபாலில் நிகழ்ந்த சோகம்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 70 வயதான கன்ஷ்யாம், தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என 4 பிள்ளைகளையும் தனியாளாகக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார்.
முகலாயர் ஆட்சி முதல் நேரு உயர்த்திய மூவர்ணக் கொடி வரை! செங்கோட்டை சுதந்திர தின குறியீடான வரலாறு
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற செங்கோட்டை முகலாய பேரரசர் ஷாஜஹானால் சுமார் 10 ஆண்டுகள் செலவிடப்பட்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாகும்.
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்படுத்திய சேதம் 1.5 பில்லியன் டாலர்: கோவையில் அண்ணாமலை பேச்சு
கோவையில் நடைபெற்ற மேஜர் மதன் எழுதிய ஆபரேஷன் சிந்தூர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
"தமிழில் பிழை இல்லாமல் வாசியுங்கள்! பட்ஜெட் கூட்டத்தொடரில் மதிமுக எம்எல்ஏ - நிதியமைச்சர் மரிய வில்சன் காரசார விவாதம்
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையைத் தமிழில் பிழை இல்லாமல் வாசிக்குமாறு மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.
"கேரளா இனி கேரளம்!" அமளிக்கு இடையே மக்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; முழு விவரம்
கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்கு பொறுப்பேற்கக் கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
டெங்கு காய்ச்சலுக்கு எதிரான 'Qdenga' தடுப்பூசி: 2027-ல் இந்தியாவில் அறிமுகம், யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?
இந்தியாவின் முதல் டெங்கு காய்ச்சல் தடுப்பூசியான Qdenga, வரும் 2027-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி: தவெக அரசின் புதிய அரசாணை
தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு துறைகளிலும் புதிய நிர்வாகப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி மாணவர்கள் போராட்டம்: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என அறிவிப்பு
டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விரைவில் உரையாற்றுவார் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லி செங்கோட்டையில் 'அபிஞான்' செயலி, முக அடையாளம் காணும் FRS கேமராக்கள் என கண்காணிப்பு தீவிரம்
இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ராஞ்சி வினாத்தாள் கசிவு போராட்டம்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை முற்றுகையிட்ட மாணவர்கள்
ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், அரசுப் பணி நியமன தேர்வுகளில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்கள்கிழமை அன்று சட்டப்பேரவையை முற்றுகையிடும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.
சட்டசபைக்குள் செல்போனுக்கு அனுமதியில்லை! அமைச்சர் ஷாஜகானைக் கண்டித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்; பேரவையில் பரபரப்பு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற அவைக்குள் செல்போன் கொண்டு வந்து அதைப் பார்த்து படித்த அமைச்சர் ஷாஜகானை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பகிரங்கமாகக் கண்டித்தார்.
உங்கள் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 11) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாரதத் தாயை போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து; பாடலுக்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் அளிப்பது குறித்த அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
'வெளிநாட்டு நிதிக்குத் தடையில்லை': FCRA சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்காவுக்கு இந்தியத் தூதர் வெளியிட்ட 'உண்மை நிலவரம்'
இந்தியாவில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 'வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026' (FCRA Amendment Bill, 2026) குறித்து அமெரிக்க எம்.பி ஒருவர் முன்வைத்த விமர்சனங்கள், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றிலேயே முதல்முறை! நெல், கரும்பு ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனுக்கு மேலும் 1 ஆண்டு பணி நீட்டிப்பு; மத்திய அரசு உத்தரவு
அமலாக்கத்துறையின் இயக்குநராக செயல்பட்டு வரும் 59 வயதான ராகுல் நவீனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை: புகழ்பெற்ற பப் மூடல்; கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
பெங்களூருவில் உள்ள நட்சத்திர உணவகங்கள் மற்றும் பிரபல கேளிக்கை விடுதிகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், பூஞ்சை பிடித்த கெட்டுப்போன இறைச்சி மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்டீபன் ஹாக்கிங் வரிசையில் இந்திய இயற்பியலாளர்! சர்வதேச டிராக் பதக்கம் 2026 வென்று தீபக் தார் சாதனை
இந்தியாவின் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளரும், ஐஐஎன்எஸ்ஏ சிறப்புப் பேராசிரியருமான தீபக் தாருக்கு 2026 ஆம் ஆண்டிற்கான டிராக் பதக்கம் (Dirac Medal) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி கடத்தப்பட்ட இந்திய தேயிலை விவசாயி: பங்களாதேஷ் எல்லையில் பரபரப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா - பங்களாதேஷ் எல்லை பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய விவசாயி ஒருவரை பங்களாதேஷை சேர்ந்த கும்பல் எல்லை தாண்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடுவானில் 300 அடி கீழே சரிந்த ஏர் இந்தியா விமானம்: விமானியின் போதைப்பொருள் சோதனை முடிவுகள் இன்று வெளியாகக்கூடும்
தாய்லாந்தின் பூக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா (AI2379) விமானம் நடுவானில் கடும் குலுக்கலுக்கு உள்ளாகி, திடீரென சுமார் 300 அடி உயரத்தில் இருந்து கீழே சரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து AAIB தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று தனித்தீர்மானம்
தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவன விழாக்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்வுகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு தனித்தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.
"ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி!" ஹர் கர் திரங்கா இயக்கத்தில் இணைய பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்திய நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய பலம்: 15 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அனுபவசாலிகள் vs வேகமாகக் கற்கும் திறனுடையவர்கள்: 2030-ல் யாருக்கு அதிக வேலைவாய்ப்பு?
2030-க்குள் வேலைவாய்ப்பு சந்தையில் அதிக அனுபவம் உள்ளவர்களை விட, வேகமாகப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்று கல்வியாளர் பிரசாந்த் கிராத் கூறுகிறார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன் அருணாச்சல பிரதேச வரைபடத்தை இந்தியா மாற்றியது ஏன்? முழு பின்னணி
மத்திய அரசு அருணாச்சல பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தைப் புதுப்பித்து, சீன எல்லையோரப் பகுதியில் உள்ள வியூக ரீதியிலான கணவாய்கள், ஏரிகள், குடியிருப்புகள் மற்றும் 1962 போர் நினைவிடங்கள் உள்ளிட்ட 27 முக்கிய இடங்களை அதில் புதிதாக பெயரிட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 3 தேசிய விருதுகள் பெற்று சாதித்த சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி ஆகாங்ஷா சிங்
மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR-CIMAP) மூத்த விஞ்ஞானியான முனைவர் ஆகாங்ஷா சிங், ஒரே ஆண்டில் நாட்டின் மூன்று உயரிய தேசிய விருதுகளைப் பெற்று அரிய ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்க ஐவி லீக் பல்கலையில் சாதித்த தமிழ் மாணவன்! ரூ.3.55 கோடி ஸ்காலர்ஷிப்புடன் பிரணவ் இளங்கோ சாதனை
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பிரணவ் இளங்கோ என்ற மாணவர், அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ஐவி லீக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயிலத் தேர்வாகியுள்ளார்.