Loading...
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய பலம்: 15 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய பலம்: 15 நீதிபதிகள் இன்று பதவியேற்பு

எழுதியவர் Vasuki
Aug 09, 2026
05:52 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைவரின் உத்தரவைத் தொடர்ந்து, 8 வழக்கறிஞர்கள் மற்றும் 7 மாவட்ட நீதிபதிகள் என மொத்தம் 15 பேர் புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதுடன், காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது.

புதிய நீதிபதிகள்

நீதிபதிகளின் விபரங்கள்

நீதிபதி கே.கோவிந்தராஜன்: 1972-இல் பிறந்த இவர், 1994-இல் சட்டப்படிப்பை முடித்து குளித்தலை மற்றும் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்துள்ளார்.

நீதிபதி ரஜினீஸ் பத்தியால்: 1973-இல் பிறந்த இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.ஏ., பி.எல். பட்டமும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். பட்டமும் பெற்றவர்.

நீதிபதி என்.ரமேஷ்: 1973-இல் வேலூரில் பிறந்த இவர், சிவில் நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் அமலாக்கத் துறையின் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராகச் செயல்பட்டார்.

நீதிபதி ஜி.கே.முத்துக்குமார்: 1974-இல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிறந்த இவர், 2020-2021 காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு அரசு பிளீடராகப் பணியாற்றினார்.

புதிய நீதிபதிகள்

நீதிபதிகளின் விபரங்கள்

நீதிபதி ஆர்.ராஜேஷ் விவேகானந்தன்: 1975-இல் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர், மதுரை சட்டக்கல்லூரியில் படித்து மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியுள்ளார்.

நீதிபதி எஸ்.ரவிக்குமார்: 1977-இல் பிறந்த இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், புதுச்சேரி மாநில அரசு பிளீடராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர்.

நீதிபதி என்.திலீப்குமார்: 1980-இல் பிறந்த இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளைகளில் பணியாற்றினார்.

நீதிபதி ஏ.மனோகரன்: 1978-இல் பிறந்த இவர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சட்டப்படிப்பு முடித்து, 2016-2019-இல் தமிழக அரசின் கூடுதல் அரசு பிளீடராகப் பணியாற்றினார்.

ADVERTISEMENT

புதிய நீதிபதிகள்

நீதிபதிகளின் விபரங்கள்

நீதிபதி பி.முருகன்: 1974-இல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்த இவர், கணிதத்தில் பட்டம் பெற்று, 10 முதுகலை பட்டங்களையும், அரசியலமைப்புச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 2011-இல் மாவட்ட நீதிபதியாகத் தேர்வானார்.

நீதிபதி எஸ்.கார்த்திகேயன்: சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் பிறந்த இவர், 2014-இல் மாவட்ட நீதிபதியாகத் தேர்வாகி, புதுச்சேரி சட்டத்துறைச் செயலாளராகவும், சென்னை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

நீதிபதி என்.குணசேகரன்: 1976-இல் கோவையில் பிறந்த இவர், 2014-இல் மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நெல்லை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

நீதிபதி எஸ்.அல்லி: 1966-இல் பிறந்த இவர், சீர்காழி வடரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். கும்பகோணம் மாஜிஸ்திரேட்டாகவும், மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதியாகவும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளராகவும் பணியாற்றியவர்.

ADVERTISEMENT

புதிய நீதிபதிகள்

நீதிபதிகளின் விபரங்கள்

எம்.டி. சுமதி: மாவட்ட நீதிபதியாக பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். பல்வேறு நிலைகளில் நீதித்துறைச் சேவையாற்றி, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதிலும் நிர்வாகத் திறமையிலும் பங்காற்றியுள்ளார்.

பி. முருகேசன்:தமிழ்நாடு மாநில நீதித்துறையில் நீண்ட காலம் நீதித்துறை அதிகாரியாகப் பணியாற்றி மாவட்ட நீதிபதி அந்தஸ்தை எட்டியவர். பல முக்கிய சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் திறம்படத் தீர்ப்பளித்த அனுபவம் கொண்டவர்.

சி. திருமகள் சந்திரசேகர்: நீதித் துறையில் மாவட்ட நீதிபதியாகச் சிறப்பாகப் பணியாற்றிய இவர், வழக்குகளின் தன்மையை ஆராய்ந்து விரைவான நீதி வழங்குவதில் புகழ்பெற்றவர். பணிமூப்பு மற்றும் சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஆகஸ்ட் 4, 2028 வரை இவரது பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT