Loading...
சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லி செங்கோட்டையில் 'அபிஞான்' செயலி, முக அடையாளம் காணும் FRS கேமராக்கள் என கண்காணிப்பு தீவிரம்
டெல்லி செங்கோட்டை பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லி செங்கோட்டையில் 'அபிஞான்' செயலி, முக அடையாளம் காணும் FRS கேமராக்கள் என கண்காணிப்பு தீவிரம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2026
01:57 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த தேசிய விழாவில், சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டறிய டெல்லி காவல்துறை அதிநவீனத் தொழில்நுட்பங்களை முதன்முறையாக பரவலாக பயன்படுத்தி வருகிறது. டெல்லி காவல்துறை தனது சோதனைகளுக்காக 'அபிஞான்' என்ற பிரத்யேக செயலியை பயன்படுத்தி வருகிறது. ஒரு கோடிக்கும் அதிகமான குற்றவாளிகளின் கைரேகை தரவுகளை கொண்ட இந்தச் செயலியின் மூலம், சந்தேகப்படும் நபர்களின் கைரேகைகள் கையடக்க கருவிகள் வாயிலாகச் சில வினாடிகளில் சரிபார்க்கப்படுகின்றன. மேலும், கூட்டத்தில் இருக்கும் முகங்களை ஸ்கேன் செய்து குற்றவாளிகளின் படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் FRS வசதி கொண்ட சிறப்பு ரோந்து வாகனங்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

கண்கணிப்பு

1,000 CCTV கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை

செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்க FRS வசதியுடன் கூடிய சுமார் 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செங்கோட்டையின் உள்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களும் காவல்துறையினரும் பல கிலோமீட்டர் சுற்றளவை கண்காணித்து வருகின்றனர்.

வான்வழி அச்சுறுத்தல்களைத் தடுக்க ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதுடன், செங்கோட்டையை சுற்றியுள்ள உயர்மட்ட பகுதிகளில் துப்பாக்கி சுடும் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்கவிட முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் 'ஸ்மார்ட் போலிசிங்' திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT