இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
'அண்ணன் சீர்' திட்டம்: திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்க ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய நிதிநிலை அறிக்கையில், பெண்களுக்குத் திருமண உதவி வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்காக ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ ஆதரவு பயங்கரவாதக் குழு திட்டமிட்டது: பஞ்சாப் காவல்துறை
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த இரண்டு எல்லை தாண்டிய பயங்கரவாதக் குழுக்களை பஞ்சாப் காவல்துறை முறியடித்துள்ளது.
சூப்பர் க்ளீன் முதல் காமராஜர் பள்ளிகள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடுகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5-ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார்.
இனி வரிசையில் நிற்க தேவையில்லை, ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானம் முன்பதிவு: புதிய இணையதளம் தொடக்கம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க நீண்ட நேரம் வரிசையில் கால்கடுக்க நிற்பதைத் தவிர்க்கும் வகையில், வீடிலிருந்தபடியே மதுபானங்களை முன்பதிவு செய்து கடைகளில் நேரில் பெற்றுக்கொள்ள புதிய இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 06) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதவி உயர்வு, பணி இடமாற்றங்களுக்கு இனி முதல்வர் ஒப்புதல் பெற வேண்டும்: புதிய அரசாணை
தமிழ்நாடு அரசு பணிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தற்காலிக மற்றும் நிரந்தர பதவி உயர்வுகள், பணி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் போன்ற முக்கிய முடிவுகளுக்கு இனி முதலமைச்சரின் நேரடி ஒப்புதலை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் 2026: சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்
தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிகாரத்தை கைப்பற்றிய தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
'உதயநிதியை உடனடியாக ரிலீஸ் பண்ணுங்க': சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இன்றே காவல் நிலையப் பிணை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்; நடுவானில் 300 அடிகள் தடாலென கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானத்தால் பரபரப்பு
தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி பறந்து வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட கொடூரமான காற்றுப் கொந்தளிப்பில் சிக்கி சுமார் 300 அடிகள் வரை கீழே சரிந்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 05) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் விஜய்- நடிகை திரிஷா சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் கைது, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் காவல்துறை
தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை அர்த்தத்திலும் பேசிய வழக்கின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நீலாங்கரை இல்லத்தில் வைத்து சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் நாளைய தினமும் (ஆகஸ்ட் 5), அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
திமுக ஆர்ப்பாட்டத்தில் விஜய்- த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க களமிறங்கிய தவெக
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய்யை நடிகை த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து காவேரி உரிமை போராட்டத்தில் உதயநிதி சர்ச்சை பேச்சு; எழும் கண்டனங்கள்
நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை வேடமிட்டும் பேசியதாக கூறி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பாங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி
பீகார் மாநிலத்தின் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் அபார வெற்றி பெற்றுள்ளார்.
பைக் டாக்சி ஓட்டினால் அபராதம் - தமிழக அரசு அறிவிப்பு: பொதுமக்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்
தமிழகத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பெங்களூரில் 108 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: ஜூலை மாத மழைப்பொழிவு கடும் சரிவு!
கர்நாடக தலைநகர் பெங்களூரு கடந்த 108 ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த மழைப்பொழிவை ஜூலை மாதத்தில் பதிவு செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CJP போராட்டத்திற்கு பின்னர் முதல் இடைத்தேர்தல்: பாஜகவுக்கு பின்னடைவு, பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் முன்னிலை
பீஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காவேரி நீர் பிரச்சனை: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்
காவேரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளைப் பின்பற்றாமல், தமிழகத்திற்கு உரிய காவேரி நீரைத் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஓல்ட் மாங்க், பேக்பைப்பர், ராயல் சேலஞ்ச் மதுபானங்களுக்கு FSSAI தடை விதிப்பு! காரணம் இதுதான்
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நாட்டின் பிரபல மதுபான பிராண்டுகளான ஓல்ட் மாங்க், ஆண்டிக்குவிட்டி புளூ, ராயல் சேலஞ்ச் மற்றும் பேக்பைப்பர் டீலக்ஸ் ஆகிய விஸ்கி மற்றும் ரம் வகைகளின் குறிப்பிட்ட தயாரிப்புகளின் விற்பனைக்குத் திடீர் தடை விதித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 04) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலை இருந்தால் நடைபாதையும் இருக்க வேண்டும்! மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் தந்த உச்ச நீதிமன்றம்
இந்தியாவில் சாலைகள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் பாதசாரிகள் பாதுகாப்பாக நடப்பதற்கு ஏற்ற வகையில் ஆக்கிரமிப்பற்ற தனியான நடைபாதைகளை இரு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் பதவி பறிப்பு? உளவுத்துறை ரிப்போர்ட்டால் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக DTNext செய்தி வெளியிட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு எதிரொலி: NTA தனது வளாக பாதுகாப்பிற்காக ₹7.5 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது
தேசிய தேர்வு முகமை (NTA), ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நியமிப்பதற்காக ₹7.5 கோடி மதிப்பிலான டெண்டரைக் கோரியுள்ளது.
கேரளாவில் பெருமழை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு, 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் வழக்கில் பிரிஜ்பூஷன் சரண் சிங் விடுதலை! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாஜக எம்பியுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது ஆறு பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவரை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 1 வாரத்திற்கு மழை நீடிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ள நிலையில், இந்த மழைப்பொழிவு அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 5.64 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை: மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ்மை நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 5.64 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மேலும் தீவிரமடையும் மழை! நீலகிரி, தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
வட உள் கர்நாடகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாலும், தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை மற்றொரு தாழ்வுப் பாதை நிலவுவதாலும் தமிழகத்தில் மழை தீவிரமடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 10 கண் சொட்டு மருந்துகளைத் திரும்பப் பெறும் சன் பார்மா! நோயாளிகளுக்கு அவசர எச்சரிக்கை
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா, இந்தியாவில் விற்பனையாகும் தனது 10 வகையான கண் சொட்டு மருந்து தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பயணத்தை ஒத்திவையுங்கள்! சபரிமலை பக்தர்களுக்குத் தமிழ்நாடு அரசு மற்றும் தேவசம்போர்டு அவசர எச்சரிக்கை
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தமிழக அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணைந்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
பவர்கட் அலெர்ட்! நாளை (ஆகஸ்ட் 02) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
100 வாரங்கள், பிரம்மாண்ட விழிப்புணர்வு! போதையற்ற இளைஞர்கள் தேசிய இயக்கத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், அவர்களை சமுதாய மாற்றத்திற்கான தூதர்களாக மாற்றும் நோக்கிலும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதையற்ற இளைஞர்கள் (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan) என்ற பிரம்மாண்ட இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.
காவல்துறை சீருடையில் நாசவேலை திட்டம்! ஜந்தர் மந்தர் போராட்டம் மற்றும் முதல்வரைக் குறிவைத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தின் போது, காவல்துறை சீருடையில் ஊடுருவி பெரிய அளவிலான நாசவேலைகளை செய்யத் திட்டமிட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை மேற்கு வங்க மாநில சிறப்பு அதிரடிப் படை கைது செய்துள்ளது.
ரூ.125க்கு விற்க வேண்டிய பெட்ரோல் ரூ.95க்கு கிடைக்க காரணம்! எத்தனால் கலப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்
மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் தீவிரமடைந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 135 டாலராக உயர்ந்திருந்த போதும், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயராமல் ரூ.94.77 என்ற அளவிலேயே கட்டுக்குள் இருந்ததற்கு 20 சதவீத எத்தனால் கலப்பு (E20) கொள்கையே முக்கியக் காரணம் என மத்திய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மாணவர்களுக்கு இனி சிரமம் இல்லை! நீட் 2026 கலந்தாய்வில் அதிரடி மாற்றங்கள்! ஒரே நாடு ஒரே கவுன்சிலிங் கோரிக்கை
மருத்துவக் கலந்தாய்வுக் குழு இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்வித் துறையை நவீனமயமாக்க மத்திய அரசு உறுதி! ஸ்டார்ட்-அப் சாதனைகளுக்கு இளைஞர்களே காரணம்! மைசூரில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கர்நாடக மாநிலம் மைசூரில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு இளைஞர் மையமான விவேக ஸ்மாரகா கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
வினாத்தாள் கசிவு செய்தால் 10 ஆண்டு சிறை! புதிய சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்தச் சட்டம் 2026க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளார்.
ஜிஎஸ்டி வசூலில் புதிய மைல்கல்! ஜூலை மாத வசூல் ₹2.11 லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் நுகர்வுத் திறன் தொடர்ந்து வலிமையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், கடந்த ஜூலை 2026 மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 15.4 சதவீதம் உயர்ந்து ₹2.11 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு நற்செய்தி! பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு! ₹3.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.