Loading...
காவேரி நீர் பிரச்சனை: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்
கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது

காவேரி நீர் பிரச்சனை: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2026
03:26 pm

செய்தி முன்னோட்டம்

காவேரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவேரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளைப் பின்பற்றாமல், தமிழகத்திற்கு உரிய காவேரி நீரைத் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. காவேரி அமைப்புகள் பலமுறை உத்தரவிட்டும் கர்நாடகா உரிய தண்ணீரைத் திறக்காததால், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரவு

காவேரி குழுக்களின் உத்தரவும் கர்நாடகாவின் வீழ்ச்சியும்

கடந்த ஜூலை 28 அன்று நடைபெற்ற CWRC கூட்டத்தில், கிருஷ்ணராஜ சாகர்(KRS) மற்றும் கபினி அணைகளில் இருந்து ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி நீரை பிலிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்கிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனை ஜூலை 30 அன்று நடைபெற்ற CWMA கூட்டமும் உறுதி செய்தது.

ஆனால், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரையிலான காலக்கட்டத்தில் பிலிகுண்டுலுவில் தினமும் வெறும் 158 முதல் 550 கனஅடி நீர் மட்டுமே வரத்தாகப் பதிவாகியுள்ளது.

இது உத்தரவிடப்பட்ட அளவை விட மிகக் குறைவாகும்.

நீர் இருப்பு

அணைகளில் போதுமான நீர் இருப்பு

கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை என தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகஸ்ட் 3 நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி என ஒட்டுமொத்தமாக நான்கு அணைகளிலும் சேர்த்து 77.537 டி.எம்.சி நீர் (பயன்படுத்தக்கூடிய நீர் 67.517 டி.எம்.சி) உள்ளதால், தமிழகத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரை திறப்பதில் கர்நாடகாவுக்கு எந்த நடைமுறை சிக்கலும் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணை பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சார பகிர்வு சூத்திரத்தின்படி தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் 26.954 டி.எம்.சி தண்ணீர் கிடைக்க வேண்டும்.

ஆனால், CWMA ஒதுக்கிய 4.536 டி.எம்.சி நீரையை கூட கர்நாடகா வழங்க தவறிவிட்டதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

ADVERTISEMENT