Loading...
இனி வரிசையில் நிற்க தேவையில்லை, ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானம் முன்பதிவு: புதிய இணையதளம் தொடக்கம்
டாஸ்மாக் புதிய இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது

இனி வரிசையில் நிற்க தேவையில்லை, ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானம் முன்பதிவு: புதிய இணையதளம் தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2026
09:52 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க நீண்ட நேரம் வரிசையில் கால்கடுக்க நிற்பதைத் தவிர்க்கும் வகையில், வீடிலிருந்தபடியே மதுபானங்களை முன்பதிவு செய்து கடைகளில் நேரில் பெற்றுக்கொள்ள புதிய இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 'Tasmace2e.in' என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் தற்போதைய மதுபான பிராண்டுகளின் இருப்பு நிலவரத்தை வாடிக்கையாளர்கள் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

நடைமுறைகள்

ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறைகள்

இணையதளத்தில் லாக்-இன் செய்யும் போது, விண்ணப்பதாரர் 21 வயதை கடந்தவர் என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்து 5 கி.மீ முதல் 25 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள டாஸ்மாக் கடைகள் அல்லது மாவட்டம் மற்றும் கடை எண்ணை பதிவிட்டு விரும்பிய கடையைத் தேர்வு செய்யலாம்.

விரும்பிய பிராண்டை தேர்வு செய்து ஆன்லைனிலேயே பணத்தை செலுத்தி ஆர்டர் செய்யலாம்.

ஆன்லைனில் ஆர்டர் செய்ததும் ஒரு QR கோட் உருவாகும்.

அதை டாஸ்மாக் கடையில் காண்பித்து, கூடுதல் கட்டணமின்றி சரியான MRP விலையிலேயே மதுபானத்தை பெற்றுக் கொள்ளலாம்.

வசதிகள்

இணையதளத்தின் முக்கிய வசதிகள்

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் செயல்படும் இந்த இணையதளத்தில், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒருமுறை மதுபான இருப்பு நிலவரம் புதுப்பிக்கப்படும்.

முன்பதிவு செய்த மதுபானம் கிடைக்காத பட்சத்தில், பணம் உடனடியாக திரும்ப வழங்கப்படும் அல்லது வேறு கடையில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும்.

மேலும், குறிப்பிட்ட டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் இடத்திற்கான GPS ரூட்டையும் இந்தத் தளம் வழிகாட்டும்.

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் மதுபான விற்பனை நடைமுறையில் உள்ள நிலையில், தமிழகத்திலும் இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இருப்பினும், முழு மதுவிலக்கை வலியுறுத்தும் அமைப்புகளிடமிருந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT