Loading...
IPL தொடரில் மேட்ச் பிக்சிங் புகார்: முன்னாள் ரஞ்சி வீரர் ரசித் பாட்டியா அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு
CSK தொடர்பான ரகசியத் தகவல்களை லண்டனை சேர்ந்த மேட்ச் பிக்சிங் புக்கிகளுக்கு வழங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார் ரசித் பாட்டியா

IPL தொடரில் மேட்ச் பிக்சிங் புகார்: முன்னாள் ரஞ்சி வீரர் ரசித் பாட்டியா அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2026
04:02 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் ரஞ்சி கோப்பை வீரர் ரசித் பாட்டியா அளித்துள்ள வாக்குமூலம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஹெல்கா செய்தி நிறுவனம் நடத்திய ரகசிய புலனாய்வில் சிக்கிய ரசித் பாட்டியா, 2025 ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தொடர்பான ரகசியத் தகவல்களை லண்டனை சேர்ந்த மேட்ச் பிக்சிங் புக்கிகளுக்கு ஸ்னாப்சாட் செயலி மூலம் வழங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

பிக்சிங்

ஐபிஎல் 2025 பிக்சிங்

5 ஐபிஎல் போட்டிகளில் டாஸுக்கு முன்பாக பிளேயிங் லெவன் விபரங்களை பகிர்ந்ததற்காக ஒரு போட்டிக்கு ₹60 லட்சம் வீதம் மொத்தம் ₹3 கோடி பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

2018-19 சையத் முஷ்டாக் அலி தொடரில் தான் விளையாடிய போது, திட்டமிட்டு 2 'வைடு' பந்துகளை வீசி ஒரு பந்திற்கு ₹8 லட்சம் வீதம் ₹16 லட்சம் பெற்றதாகக் கூறியுள்ளார்.

நாகாலாந்து ரஞ்சி அணியில் அறிமுகமாவதற்காக ₹15 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

கட்டணப் பட்டியல்

பிக்சிங் கட்டணப் பட்டியல்

ஐபிஎல் மற்றும் டெல்லி பிரீமியர் லீக்(DPL) தொடர்களில் மேட்ச் பிக்சிங் செய்வதற்கான நடைமுறைகளையும் கட்டணங்களையும் ரசித் பாட்டியா விளக்கியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் பிளேயிங் லெவன் தகவலை பகிர ₹60 லட்சமும், ஸ்பாட் பிக்சிங் செய்ய போட்டிக்கு ₹1 கோடியும் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

டெல்லி பிரீமியர் லீக் தொடருக்கு இவ்விரண்டிற்கும் தலா ₹40 லட்சம் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் வரவில்லை.

எனினும், டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம்(DDCA) இது குறித்து விளக்கம் அளித்துள்ளது:

"இப்போதைய தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவை. இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அதிகாரப்பூர்வ விசாரணைக் குழுவிற்கும் காவல்துறைக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன" என DDCA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT