நடிகை த்ரிஷா குறித்து காவேரி உரிமை போராட்டத்தில் உதயநிதி சர்ச்சை பேச்சு; எழும் கண்டனங்கள்
செய்தி முன்னோட்டம்
நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகவும் இரட்டை வேடமிட்டும் பேசியதாக கூறி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் தலைவர்களும், ஊடகவியலாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவேரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக திமுக சார்பில் நடத்திய போராட்டத்தில் உதயநிதி பேசிய பிறகு இந்த சர்ச்சை வெடித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இத்தகைய பேச்சு அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம், திரைத்துறையை சேர்ந்த ஒருவரே சக பெண் நடிகரை பற்றி இவ்வாறு அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதை திரைப்பட அமைப்புகள் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலினைக் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
கலைஞரின் பேரன் என்று சொல்லிக் கொண்டு, இப்படிப் பேசாவிட்டால் தான் ஆச்சரியம்.
— Vinoj P Selvam (@VinojBJP) August 3, 2026
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களும் ஒரு முன்னாள் நடிகர் தான். இருந்தும் சக கலைஞர்கள் குறித்து இப்படி அருவருப்பாக பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு நடிகர் சங்கம் சார்பில்… pic.twitter.com/hNNgJBHXyt
கண்டனம்
தமிழிசை சௌதாரராஜன், நாராயணன் திருப்பதி சாடல்
பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இது குறித்துக் கூறுகையில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசும் உதயநிதியை நாட்டின் எந்த ஒரு பெண்ணும் மன்னிக்க மாட்டார் எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், இந்த அவதூறான பேச்சுக்கு மு.க. ஸ்டாலின் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்காமல் அமைதி காப்பது மிகவும் வெட்கக்கேடானது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மூத்த நிர்வாக தமிழிசையும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது போக ஊடகவியலாளர்கள் சிலரும் உதயநிதியின் கருத்து சபை நாகரீகம் அற்றது எனக்குறிப்பிட்டுள்ளனர்.
ஆளும் கட்சியை விமர்சிக்க பல கருத்துகள் இருக்கையில், ஒருவரின் தனிப்பட்ட விவகாரத்தை சம்மந்தமில்லாத இடத்தில், முறையற்ற வார்த்தைகள் பேசி விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்ற தன்மையை காட்டுவதாகவும் அவர்கள் சாட்டியுள்ளனர்.