Loading...
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 1 வாரத்திற்கு மழை நீடிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னையில் அடுத்த 1 வாரத்திற்கு மழை நீடிக்கும்

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 1 வாரத்திற்கு மழை நீடிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2026
10:23 am

செய்தி முன்னோட்டம்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ள நிலையில், இந்த மழைப்பொழிவு அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது X (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக மழை நீடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கர்நாடகா

காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் மேகதாது விவகாரம்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுடன் ஒப்பிடுகையில் மழையின் அளவு தற்போது சற்றே குறைந்துள்ளது.

இருப்பினும், கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாக, தமிழகத்திற்கு அடுத்த சில நாட்களுக்கு சிறப்பான நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், கர்நாடக அரசு திட்டமிடுவது போல மேகதாது அணை கட்டப்பட்டால், கபினியிலிருந்து வரும் உபரி நீர் தமிழகத்தை வந்தடைவதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்படும் என்றும், மேட்டூருக்கு நீர் வரும் அளவும் நேரமும் இதனால் மாறுபடக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT