Loading...
பவர்கட் அலெர்ட்! நாளை (ஆகஸ்ட் 02) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

பவர்கட் அலெர்ட்! நாளை (ஆகஸ்ட் 02) மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய இடங்கள்

எழுதியவர் Vasuki
Aug 02, 2026
01:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன் கிழமை (ஆகஸ்ட் 02) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்: தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், பாண்டியன்கரடு, எரிசினம்பட்டி, வல்லகுண்டாபுரம், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வலையபாளையம், தீபாலபட்டி, அங்கலகுறிச்சி ஆகிய பகுதிகள்.

பெரம்பலூர் மாவட்டம்: பேரளி, கல்பாடி, அசூர், கே.புதூர்.

தேனி மாவட்டம்: இராசிங்கபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம், சூளப்புரம்.

ADVERTISEMENT