Loading...
சூப்பர் க்ளீன் முதல் காமராஜர் பள்ளிகள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடுகள்
தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடுகள்

சூப்பர் க்ளீன் முதல் காமராஜர் பள்ளிகள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடுகள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2026
10:35 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகஸ்ட் 5-ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் உண்மையான சமூகநீதி கொண்ட ஆட்சி நடைபெற்று வருவதாக பாராட்டினார். சுமார் ரூ.10 லட்சம் கோடி கடன் சுமையுள்ள இக்கட்டான நிதிச் சூழலிலும், மாநிலத்தைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், 'சிங்கப்பெண்' திட்டம் மற்றும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது ஆகியவை தவெக அரசின் தொடக்க கால சாதனைகள் எனச் சுட்டிக்காட்டினார்.

அறிவிப்புகள்

கல்வி மற்றும் உள்கட்டமைப்புக்கான முக்கிய அறிவிப்புகள்

மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு இலக்குகளுக்காகக் கீழ்க்காணும் முக்கிய திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் சீரான வளர்ச்சியை உறுதி செய்ய 'வெற்றித் தமிழகம்' எனும் புதிய தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் 'சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்' திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் சிறப்புப் பள்ளிகளை உருவாக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காலத்திற்கு ஏற்றவாறு பள்ளிப் பாடத்திட்டங்களை மறுசீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறைக்கென ரூ.44, 527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு ஒப்பந்தங்களில் இடம்பெறும் டெண்டர் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிதியமைச்சர், மகளிர் உரிமைத்தொகை உயர்வு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்தும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்.

ADVERTISEMENT