'உதயநிதியை உடனடியாக ரிலீஸ் பண்ணுங்க': சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இன்றே காவல் நிலையப் பிணை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பான அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தமிழ்நாடு AG ஆஜராகி விளக்கம் அளித்தார். "தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க காவல்துறை திட்டமிடவில்லை. அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், இன்றே காவல் நிலைய பிணையில் விடுதலை செய்யவே காவல்துறை முடிவு செய்துள்ளது" எனத்தெரிவித்தார்.
உத்தரவு
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு
அரசு தரப்பின் இந்த விளக்கத்தை பதிவு செய்துகொண்ட சென்னை உயர்நீதிமன்றம், விசாரணைக்குப் பிறகு இன்றே உதயநிதி ஸ்டாலினை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்கும் போது உதயநிதி ஸ்டாலின் பேசிய இரட்டை அர்த்த வார்த்தை தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, தவெகவினரின் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கும், அவரது கைது நடவடிக்கைக்கும் வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.