Loading...
ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்; நடுவானில் 300 அடிகள் தடாலென கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானத்தால் பரபரப்பு
நடுவானில் 300 அடிகள் தடாலென கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்

ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்; நடுவானில் 300 அடிகள் தடாலென கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானத்தால் பரபரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2026
02:38 pm

செய்தி முன்னோட்டம்

தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி பறந்து வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட கொடூரமான காற்றுப் கொந்தளிப்பில் சிக்கி சுமார் 300 அடிகள் வரை கீழே சரிந்தது. இதனால் விமானத்திலிருந்த பயணிகள் பலரும் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூகெட்டில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியாவின் AI2379 விமானம், இலக்கை நெருங்கும் வேளையில் நடுவானில் மோசமான சுழற்காற்றில் சிக்கியது. Flightradar24 தகவல்களின்படி, விமானம் டெல்லியில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதன் உயரத்தை திடீரென இழந்தது. பயணிகள் பலர் தூங்கிக் கொண்டிருந்த போது, விமானம் சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வரை பயங்கரமாக குலுங்கி சரிந்ததாகக் கூறப்படுகிறது.

விளக்கம்

பயணிகள் காயம் மற்றும் ஏர் இந்தியா விளக்கம்

விமானம் குலுங்கிய அதிர்ச்சியில் சீட் பெல்ட் அணியாத பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்புற மேல்பகுதியில் மோதி லேசான காயமடைந்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதும், காயமடைந்த 12-க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கே நாங்கள் முதன்மை முன்னுரிமை அளிக்கிறோம். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் விமான நிலையக் குழுவினர் வழங்கி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் உட்புறக் கூரையில் பலத்த மோதலினால் ஏற்பட்ட விரிசல்கள் குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT