Loading...
நாடாளுமன்ற முடக்கம்: 24 மணி நேர விவாதத்திற்கு அமித் ஷா அழைப்பு! ராகுல் காந்தி நிராகரிப்பு
24 மணி நேர விவாதத்திற்கு அமித் ஷா அழைப்பு

நாடாளுமன்ற முடக்கம்: 24 மணி நேர விவாதத்திற்கு அமித் ஷா அழைப்பு! ராகுல் காந்தி நிராகரிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
02:42 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொடர்ந்து நீடித்து வரும் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, எதிர்க்கட்சிகள் கோரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார் எனக் கூறி, 24 மணி நேரத் தொடர் விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், அவரது அழைப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிராகரித்துள்ளார். நீட் தேர்வு போராட்டக்காரர்கள் மீதான தடியடி நடவடிக்கை மற்றும் ராமர் கோயில் நன்கொடைத் திருட்டு விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி நிலவி வருகிறது. இது குறித்துப் பேசிய அமித்ஷா, எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக முறைப்படி கடிதம் அளித்தால் 24 மணி நேரமும் அவையிலேயே அமர்ந்து கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ராகுல் காந்தி

அமித் ஷாவின் ஆஃபரை நிராகரித்த ராகுல் காந்தி

அமித் ஷாவின் இந்த அழைப்பை உடனடியாக நிராகரித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "நாங்கள் உள்துறை அமைச்சரின் விரிவுரையைக் கேட்க வரவில்லை; மாணவர்களை நோக்கிச் சுட உத்தரவிட்டது யார்? ஆணி அடிக்கப்பட்ட தடிகளால் அடிக்க உத்தரவிட்டது யார்? என்பதற்கு மட்டுமே பதில் தேவை. மாணவர்களைச் சுட அமித் ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஜூலை 20 அன்று மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல், இரு முக்கிய விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன.

மத்திய அரசின் விவாத அழைப்பையும் அமித் ஷாவின் உறுதியளிப்பையும் காங்கிரஸ் நிராகரித்துள்ளதால், நாடாளுமன்றத்தில் நீடித்து வரும் முடக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ADVERTISEMENT