இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்

ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

12 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 13) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி

மகாராஷ்டிராவின் கட்சிரோலி காவல்துறை, பாம்ராகாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பிரசவித்த பெண்ணின் உயிரை காப்பதற்காக மனிதாபிமான முறையில் செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

வார இறுதியில் ஓணம் பண்டிகையும், அதைத்தொடர்ந்து மிலாடி நபியும் வருவதனால், இந்த வாரம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரவிருக்கிறது.

இப்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு 

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், இனி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரக் காப்பீட்டை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்வர் மம்தா பனர்ஜீ-ஐ சந்திக்க தயார்..ஆனால்; கோரிக்கைகளை பட்டியலிட்ட மருத்துவர்கள்

மேற்கு வங்க அரசு இன்று, புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

11 Sep 2024

தமிழகம்

தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்; தென்மாவட்டங்களில் மிதமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் பருவமழை தீவிரத்தால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என IMD எச்சரிக்கை

தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

11 Sep 2024

மதுரை

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் முதல் 24 மணிநேரமும் செயல்படவுள்ளது விமான நிலையம்

மதுரை விமான நிலையம், அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு

புதுச்சேரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள்(unreserved coaches) அதிகரிக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் புதன்கிழமை ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.

5,000 சிறு பாசன குளங்களை புனரமைக்க ₹500 கோடியை ஒதுக்கியுள்ள தமிழக அரசு 

தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் மொத்தம் ₹500 கோடி செலவில் 5,000 சிறு பாசன தொட்டிகளை புனரமைக்க தமிழக அரசு நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கியுள்ளது.

11 Sep 2024

ஃபோர்டு

மீண்டும் தமிழகத்திற்கு வருகிறதா ஃபோர்ட் நிறுவனம்? அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனத்தை வரவேற்க திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பயணிகள் கவனத்திற்கு..2025 பொங்கலுக்கான ரயில் முன்பதிவு நாளை துவங்குகிறது

சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் பயணிகள், தயாராகுங்கள்!

11 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 12) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

11 Sep 2024

சென்னை

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்! விவரங்கள் இதோ

சமீபத்தில், தமிழக அரசு சார்பாக சென்னையில் நடந்து முடிந்த பார்முலா 4 கார் ரேஸ் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

10 Sep 2024

சென்னை

சென்னையில் 81 இடங்களில் 3D பஸ் ஸ்டாப்; எங்கே வரப்போகிறது?

சென்னை மாநகராட்சி, பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம் மற்றும் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி உட்பட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களை உருவாக்குவதற்கான முடிவை எடுத்து உள்ளது.

10 Sep 2024

சிபிஐ

சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி உடல்நலம் பாதிப்பு; AIIMS மருத்துவமனையில் செயற்கை ஸ்வாசத்துடன் சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தற்போது புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் சுவாச சிகிச்சையில் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

மாணவர் போராட்டத்தினை தொடர்ந்து 3 மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு 

மோதல்கள் நிறைந்த இம்பால் பள்ளத்தாக்கில், மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அமைதிக்கு அழைப்பு விடுத்து மூன்று மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

பள்ளி கல்வியாண்டில் குறைக்கப்பட்ட வேலை நாட்கள்: புதிய நாட்காட்டி வெளியானது 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

10 Sep 2024

தமிழகம்

தமிழகம் முழுவதும் போரட்டத்தில் குதித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன?

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டமைப்பது உட்பட 31 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தது.

மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி..காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.2666 கோடி முதலீடு, 5365 பேருக்கு வேலைவாய்ப்பு: சிகாகோவில் பெரும் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 பணியிடங்கள் உருவாக்கப்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மேலும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

10 Sep 2024

கோவை

கோவை கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பு

கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் வரும் 2026 ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம்: உச்ச நீதிமன்ற காலக்கெடுவை மீறி தொடரும் போராட்டம்

மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று, திங்கள்கிழமை உத்தரவிட்டது.

10 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 11) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

09 Sep 2024

அபுதாபி

இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் அபுதாபி பட்டத்து இளவரசர்: அவரின் நிகழ்ச்சி நிரல் என்ன?

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தற்போது இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

தமிழகத்தில் செப்டம்பர் 17 அன்று மிலாடி நபி; பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மிலாடி நபி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்புமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மருத்துவர்களை, செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

09 Sep 2024

சென்னை

பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு ஒரு மின்சார ரயிலும், திருவள்ளூருக்கு இரண்டு மின்சார ரயில்களும் தென்னக ரயில்வேயால் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) முதல் கூடுதலாக இயக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட 21 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த திருச்சி, தூத்துக்குடி 

சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட 131 நகரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, 2017-18 அளவுகளுடன் ஒப்பிடும்போது 2023-24இல் 21 நகரங்கள் முக்கியமான காற்று மாசுபடுத்தும் PM10 இன் செறிவை 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளன.

குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்

உலக சுகாதார நிறுவனத்தால்(WHO) பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்ட mpox என்றழைக்கப்படும் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

தமிழக துறைமுகங்களுக்கு வார்னிங்; இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

வங்காள விரிகுடா கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

09 Sep 2024

சென்னை

சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்; வருவாய் துறை நடவடிக்கை

சென்னையில் அமைந்துள்ள பிரபல கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால் தமிழக அரசு சீல் வைத்துள்ளது.

இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது; விண்ணப்பிப்பது எப்படி?

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (என்டிபிசி) பதவிகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

09 Sep 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் தலைமையில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

09 Sep 2024

பொங்கல்

இன்னும் 3 நாட்களில் 2025 பொங்கலுக்கான ட்ரெயின் முன்பதிவு துவங்கவுள்ளது

சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் பயணிகள், தயாராகுங்கள்!

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பிற்கு உள்ளான முதல் நபர்; உறுதி செய்தது மத்திய சுகாதார அமைச்சகம்

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், நாட்டில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபரை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தது.

மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு; வானிலை அறிக்கை

மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.