
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசின் தலைமையில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,"டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன" எனத்தெரிவித்துள்ளது.
தகவல்கள்
இலவச பயிற்சி குறித்த தகவல்கள்
"மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது".
"பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை".
"பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம்"என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இலவச பயிற்சி வகுப்புகள்
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC மற்றும் SSC, IBPS, RRB போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்குதல்.#CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/jgRczaEmXW
— TN DIPR (@TNDIPRNEWS) September 8, 2024