15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு
புதுச்சேரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள்(unreserved coaches) அதிகரிக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த ரயில்களில் உள்ள AC பெட்டிகள் சிலவை பொதுப்பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்- ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் விரைவு ரயில் உள்ளிட்ட ட்ரெயின்களில் ஜனவரி 20 ஆம் தேதி முதல் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. மேலும் புதுச்சேரி- மங்களூர் விரைவு ரயிலில், ஜனவரி 16 ஆம் தேதி முதல் 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. புதுச்சேரி- கன்னியாகுமரி விரைவு ரயில், வரும் ஜனவரி 26 ஆம் தேதி முதல் 4 Unreserved Compartment-கள் சேர்த்து இயக்கப்படும்.