Page Loader
தமிழகத்தில் செப்டம்பர் 17 அன்று மிலாடி நபி; பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு
பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் செப்டம்பர் 17 அன்று மிலாடி நபி; பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2024
05:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் மிலாடி நபி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 4ஆம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்ங்களில் தெரியாததால், செப்டம்பர் 16க்கு பதில், மறுநாள் செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சில தினங்கள் முன் அறிவித்தார். இந்த அறிவிப்பை ஏற்று, தமிழக அரசு தற்போது செப்.17ம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post