இன்னும் 3 நாட்களில் 2025 பொங்கலுக்கான ட்ரெயின் முன்பதிவு துவங்கவுள்ளது
சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு திரும்ப விரும்பும் பயணிகள், தயாராகுங்கள்! பொதுவாக, ரயில் டிக்கெட்டுகளை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முடியும். இதன்படி, உங்கள் வசதிக்காக செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. பயணிகள், ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். 2025ஆம் ஆண்டு, பொங்கல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும். அதற்கு முன்னர் போகி பண்டிகை 13 ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால், பலர் அதன் முந்தைய வாரத்துடன் சேர்த்து 6 நாட்கள் விடுமுறையை கழிக்க திட்டமிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.