குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்
உலக சுகாதார நிறுவனத்தால்(WHO) பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்ட mpox என்றழைக்கப்படும் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு mpox அறிகுறி இருந்தது கண்டறியப்படாத தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது. அதன்படி, வழக்குகளை கண்காணிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு திங்களன்று ஒரு புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை வழங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் தனது நெறிமுறையில், தற்போது இந்தியாவில் பரவல் குறித்த எந்த வழக்கும் இல்லை என்று குறிப்பிட்டது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்
எனினும், மாநில அரசுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், கண்காணிப்பு உத்திகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிசெய்யப்பட்ட நோய் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கான தனிமைப்படுத்தும் வசதிகளை அமைப்பதில் அமைச்சகத்தின் பல்வேறு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம், நாட்டில் உள்ள எந்தப் mpox கிளஸ்டர்களையும் கண்டறிய தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சகம் குறிப்பிட்டது. விமான நிலையங்கள் போன்ற இடங்களில் பயணிகளின் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன மற்றும் சந்தேகத்திற்கிடமான வழக்குகளின் மாதிரிகளை சோதிக்க ICMR ஆய்வக வலையமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில் mpoxஇன் பரவல் அதிகரித்து வருவதாலும், clade 1b என்ற புதிய திரிபு தோன்றுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
குரங்கம்மையின் பொதுவான அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்
காய்ச்சல் தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்) நிணநீர் கணுக்கள் வீக்கம் தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் பாதிப்புகள்: கண் வலி அல்லது பார்வை மங்குதல் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்: ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இணை நோய் பாதிப்புடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நீங்களோ, உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் நோய் வாய்பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும். நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும், நோயாளியை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதை குறைப்பதற்கு, நோயாளியின் மூக்கு மற்றும் வாயை மறைக்கக்கூடிய மருத்துவ முககவசத்தை பயன்படுத்துதல், நோயாளியின் தோலில் இருந்து உதிரக்கூடிய சொரியை தூய்மையான துணி கொண்டு மறைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.