சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்! விவரங்கள் இதோ
சமீபத்தில், தமிழக அரசு சார்பாக சென்னையில் நடந்து முடிந்த பார்முலா 4 கார் ரேஸ் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போது, மீண்டும் சென்னையில் ஒரு ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெறப்போகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதியும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் ரேசின் மூன்றாம் சுற்று போட்டிகள் செப்டம்பர் 14 மற்றும் 15 அன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், அடுத்த சுற்று போட்டிகள், ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் ரேஸ் ஓடுதளத்தில் நடக்கவுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 போட்டிகளுக்கு கிடைத்த அதே வரவேற்பு இந்த சுற்றிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.