Page Loader
சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்; வருவாய் துறை நடவடிக்கை
மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகை தொகை பாக்கி வைத்திருப்பதால் மைதானத்திற்கு சீல்

சென்னையிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்; வருவாய் துறை நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2024
01:48 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் அமைந்துள்ள பிரபல கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால் தமிழக அரசு சீல் வைத்துள்ளது. இன்று காலை மைதானத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். மைதானத்திற்கு குத்தகை பாக்கியாக ₹780 கோடி ரூபாய் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் கிண்டி ரேஸ் கோர்ஸ், 1946 ஆம் ஆண்டில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்பந்தமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பந்தகாலம் 2045 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. எனினும் இதுவரை, குத்தகை மாறிய நிலுவை தொகையை செலுத்தவில்லை. எனவே வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இச்சீல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வழக்கு

நிலுவை தொகை செலுத்த கோரி வழக்கு 

160 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், 80 ஏக்கரில் தான் குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டு வந்தன. எஞ்சிய பகுதிகளில் திருமண மண்டபங்கள், நீச்சல் குளங்கள், சொகுசு விடுதிகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இந்நிலையில் குதிரை பந்தயம் நடைபெறும் இடத்திற்கான குத்தகை பாக்கியை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின் இறுதியில் கிண்டி ரேஸ் கோர்ஸிற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கிண்டி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் ஆகிய தாசில்தார்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரில் வருகை புரிந்து மைதானத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post