பள்ளி கல்வியாண்டில் குறைக்கப்பட்ட வேலை நாட்கள்: புதிய நாட்காட்டி வெளியானது
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது, 2024-25 கல்வியாண்டிற்கான புதிய நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அதில் சில முக்கிய மாற்றங்கள் தெரிவிக்கப்பட்டன. முன்னர் எழுதப்பட்ட நாட்காட்டியில், ஒவ்வொரு கல்வியாண்டிலும் சாதாரணமாக 210 வேலைநாட்கள் மட்டுமே இருந்தது. ஆனால், புதிய நாட்காட்டியில் 220 வேலைநாட்கள் எனத்தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வேலைநாட்களை குறைக்க வேண்டும் என்பதற்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை, தற்போதைய கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து 210 நாட்களை கொண்ட திருத்தப்பட்ட நாட்காட்டியை வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.