தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்; தென்மாவட்டங்களில் மிதமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் பருவமழை தீவிரத்தால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. உச்சபட்சமாக இன்று மதுரை, தொண்டி உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும் 2 வாரங்களுக்கு வெயில் சுட்டெரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எனினும் ஆறுதல் தரும் விஷயமாக அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, தென்காசி, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சதமடித்த வெயில்
#வானிலைசெய்திகள் | 7 இடங்களில் சதமடித்த வெயில் - 2 வாரங்களுக்கு தொடர வாய்ப்பு!#SunNews | #HeatWave pic.twitter.com/E0D49tFgDZ
— Sun News (@sunnewstamil) September 11, 2024