மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி..காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை போன்ற விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டியில் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும்.
காலாண்டு விடுமுறை எப்போது? தேர்வு நேரங்கள் என்ன?
செப்டம்பர் 28-இல் இருந்து அக்டோபர் 2-ஆம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களை பொறுத்தவரை: 6ம் வகுப்பினருக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை, 7ம் வகுப்பினருக்கு மதியம் 1.15 மணி முதல் 3.15 மணி வரை, 8ம் வகுப்பினருக்கு காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, 9ம் வகுப்பினருக்கு மதியம் 1.15 மணி முதல் 4.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும். 10 மற்றும் 12-ம் வகுப்பினருக்கான தேர்வுகள் காலை 9.30 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும், மற்றும் 11-ம் வகுப்பினருக்கான தேர்வுகள் மதியம் 1.15 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது.