உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி
இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் இடையேயான போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவை அடியோடு வேரறுக்க இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள்
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி
கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை
பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப், பாகிஸ்தானின் சியால்கோட்டில் வைத்து இன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்
ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் துணை நிரந்தர பிரதிநிதி ஜமான் மெஹ்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில்(UNHRC) உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது, ஹமாஸ் குழுவுடனான தற்போதைய மோதல் குறித்து இஸ்ரேலை கடுமையாக சாடினார்.
இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன், மூத்த இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்திக்க இன்று இஸ்ரேலுக்கு பயணம் செய்யவுள்ளார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு
சிரியாவிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை?
2014ஆம் ஆண்டு முதல் 187,518 பேர் காசாவில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்துள்ளதாக ஐநா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது,
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர்
இஸ்ரேல் படைகளுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், பழுது பார்க்க முடியாத அளவுக்கு இஸ்ரேல் இராணுவமும் உளவுத்துறையும் தோற்றுவிட்டதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா?
இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு திட்டமிட உதவியது ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தான் என்று ஹமாஸின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ்
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு, காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முழுமையாக துண்டிக்க இஸ்ரேல் நேற்று உத்தரவிட்டது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் செவ்வாயன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார அறிஞரான கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா?
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(சிசிபி) ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக சுதந்திர வலைப்பதிவாளர் ஜெனிபர் ஜெங் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது?
ஹமாஸ் ஏன் அக்டோபர்-6ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது என்பதை அறிய 1973ஆம் ஆண்டின் யோம் கிப்பூர் போர் குறித்து நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தரை-கடல்-வான் தாக்குதலில் பல அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ்
இஸ்ரேல்: ஹமாஸ் குழுவைச் சேர்ந்த ஆயுதம் ஏந்தியவர்களால் ஒரு குடும்பம் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்?
இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
ஜெர்மனியப் பெண்ணின் உடலை மானபங்கப்படுத்திய ஹமாஸ் ஆயுதக் குழுவினர்
ஜெர்மனிய பெண்ணின் நிர்வாண உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அதன் மீது காரி உமிழ்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இஸ்ரேலின் 'அயன் டோம்' அமைப்பை ஹமாஸ் எவ்வாறு ஊடுருவியது?
பாலஸ்தீனிய ஆயுத குழுவானாக ஹமாஸ், ஆபரேஷன் அல்-அக்ஸா பிளட்(Operation Al-Aqsa Flood) என பெயரிடப்பட்ட ராணுவ தாக்குதலை இஸ்ரேல் மீது நேற்று தொடங்கியது.
'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு
பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸால் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை இன்று கண்டித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர், அந்த தாக்குதலை 9/11 பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டுள்ளார்.
12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2000க்கும் மேற்பட்டோர் பலி
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது?
பாலஸ்தீனத்தின ஆயுதக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பிணைய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தீவிரமடைந்ததால் 500க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேலில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன?
ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 14 பேர் பலி, 78 பேர் காயம்
மேற்கு ஆப்கானிஸ்தானை இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.
கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல்
கனடா இந்தியா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மீது மிகப்பெரும் தாக்குதல்: வைரலாகும் வீடியோக்கள்
பல ஆண்டுகளுக்கு பிறகு பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ஒரு மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
'ஆபரேஷன் இரும்பு வாள்': பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக போரை தொடங்கியது இஸ்ரேல்
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக 'இரும்பு வாள்' நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: பீதியில் மக்கள்
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் இன்று மதியம் 12:15 மணியளவில் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவரிடம் கூறிய ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவருக்கு கூறியதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்
தடை செய்யப்பட்ட காசா பகுதியில் இருந்து கடுமையான ராக்கெட் தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல் போர் நிலையை அறிவித்துள்ளது.
ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து இரண்டு ரஷ்ய தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்- 10 வயது சிறுவன் உட்பட இருவர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 10 வயது சிறுவன் மற்றும் அவரின் பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் டொராண்டோ மாநகரில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் சரமாரியாக திட்டியுள்ளார்.
ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.