NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி
    காஸா மீது தரைவழி தாக்குதல் நடத்தப்படலாம் என இஸ்ரேல் அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.

    ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி

    எழுதியவர் Srinath r
    Oct 12, 2023
    09:54 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் இடையேயான போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவை அடியோடு வேரறுக்க இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, ஹமாசுக்கு எதிரான போரை நடத்த அவசரகால அரசாங்கத்தை உருவாக்கியுள்ளார். மேலும் காஸா பகுதியின் மீது தரைவழி தாக்குதல் நடத்தப்படும் எனவும் அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.

    "நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த பூமியில் இருந்து ஹமாஸ் என்ற ஒன்று அடியோடு ஒழிக்கப்படும்" என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் டேலண்ட் பிரகடனம் செய்துள்ளார். மேலும் அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், காஸாவில் குழந்தைகளின் தலைத்துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    2nd card

    பரிதவிக்கும் காஸா மக்கள்

    இஸ்ரேல் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள காஸா பகுதி 23 லட்சம் மக்கள் தொகை கொண்டது.

    கடந்த சனிக்கிழமை ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பின், காஸா பகுதிக்கு மின்சாரம், குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் துண்டித்தது.

    காஸா பகுதியில் தற்போது சுமார் 3.5 லட்சம் பேர் வீடுகள் இழந்து தவிக்கின்றனர்.

    காஸாவிற்கும், எகிப்திற்கும் இருந்த தரை வழி எல்லையை, எகிப்து ஏற்கனவே மூடிய நிலையில் தற்போது அகதிகளாக கூட வெளியேற முடியாமல் காஸா மக்கள் தவிக்கின்றனர்.மேலும், இஸ்ரேலின் தாக்குதலால், சுமார் 1,500க்கும் மேற்பட்ட காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    3rd card

    இந்தியர்களை மீட்க ஆபரேஷனை தொடங்கியது மத்திய அரசு

    இஸ்ரேல் நாட்டில், சுமார் 18,000 இந்தியர்கள் வரை இருக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே தகவல் வெளியிட்டு இருந்தது.

    தற்போது அவர்களை மீட்க 'ஆபரேஷன் அஜயை' மத்திய அரசு தொடங்கியுள்ளது.

    "சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் நலனை காப்பதிலும் அவர்கள் பாதுகாப்பிலும் அரசு உறுதியாக உள்ளது" என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இந்தியா திரும்புவதற்கு முதலில் பதிவு செய்திருந்த நபர்கள், இன்று நாடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

     'ஆபரேஷன் அஜயை' தொடங்கிய மத்திய அரசு 

    Launching #OperationAjay to facilitate the return from Israel of our citizens who wish to return.

    Special charter flights and other arrangements being put in place.

    Fully committed to the safety and well-being of our nationals abroad.

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 11, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    பதிவு செய்தவர்கள் இன்று இந்தியா திரும்புவார்கள் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தகவல்

    The Embassy has emailed the first lot of registered Indian citizens for the special flight tomorrow. Messages to other registered people will follow for subsequent flights.@MEAIndia https://t.co/Qz4ieVd5l4

    — India in Israel (@indemtel) October 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இஸ்ரேல்
    பிரதமர்
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்? அமெரிக்கா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; புதிய வரலாறு படைத்த இந்திய பேட்மிண்டன் ஜோடி ஆசிய விளையாட்டுப் போட்டி
    ககன்யான் திட்டம்: ஆளில்லா விமான சோதனைகளை நடத்த இருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    இந்தியாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா

    இஸ்ரேல்

    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலகம்
    'ஆபரேஷன் இரும்பு வாள்': பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக போரை தொடங்கியது இஸ்ரேல்  உலகம்

    பிரதமர்

    'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி  மோடி
    'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு  இந்தியா
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி

    வெளியுறவுத்துறை

    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ் பேச்சுக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025