ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நர்கீஸ் முகமதிக்கு பெண்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர் பெண்களின் உரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் ஈரானில் தொடர்ந்து போராடி வந்தார். முகமதி, நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டார். இவர் 154 கசையடிகளுடன், 31 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, தற்போது ஈரான் தலைநகர் தெஹ்ரான் சிறையில் உள்ளார். தற்போது சிறையில் உள்ள முகமதி 13 முறை கைது செய்யப்பட்டுள்ளார், 5 முறை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. "அவரது துணிச்சலான போராட்டம் மிகப்பெரிய தனிப்பட்ட இழப்புகளுடன் வந்துள்ளது," என நோபல் விருது கமிட்டியின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் கூறியுள்ளார்.