
கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
கனடா இந்தியா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.
காலிஸ்தான் தலைவர் நிஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர் இருப்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக கனடா பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது இருநாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நடத்திய தொலைபேசி உரையாடலில் இந்தியா குறித்த விஷயங்களே அதிகமாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து டவுனின் ஸ்ட்ரீட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் தொடர்பான நிலைமை குறித்து பிரதமர் ட்ரூடோ எடுத்துரைத்தார்" எனக் கூறப்பட்டு இருந்தது.
2nd card
இந்தியா- கனடா விவகாரத்தில் பிரிட்டனின் பார்வையை தெளிவுபடுத்திய சுனக்
மேலும் அந்த அறிக்கையில் இந்தியா கனடா விவகாரம் குறித்த பிரிட்டனின் பார்வை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
"பிரதமர்(சுனக்) அனைத்து நாடுகளும் இறையாண்மையையும், சட்டத்தின் படியும், ராஜ்ய உறவுகள் மீதான வியன்னா மாநாட்டின் கொள்கைகள் உட்பட அனைத்தையும் மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளார்"
"அவர்(சுனக்) இந்த பதற்றம் தனிய வேண்டும் என விரும்புகிறார். இந்த விவகாரத்தில் அடுத்த அடிகளை எடுத்து வைக்க அதிபர் ட்ரூடோ உடன் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டார்" என அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிஜார் கொலைக்கு ட்ரூடோ, இந்தியா மீது குற்றம் சாட்டிய பின், இரு நாடுகளும் அவரவர் நாட்டில் உள்ள அடுத்த நாட்டின் தூதர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.