Page Loader
ஜெர்மனியப் பெண்ணின் உடலை மானபங்கப்படுத்திய ஹமாஸ் ஆயுதக் குழுவினர்
ஜெர்மன் குடிமகனான ஆதி லோக் ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் டாட்டூ கலைஞர் ஆவார்.

ஜெர்மனியப் பெண்ணின் உடலை மானபங்கப்படுத்திய ஹமாஸ் ஆயுதக் குழுவினர்

எழுதியவர் Srinath r
Oct 08, 2023
02:34 pm

செய்தி முன்னோட்டம்

ஜெர்மனிய பெண்ணின் நிர்வாண உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அதன் மீது காரி உமிழ்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இஸ்ரேல் படையினரின், ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கு எதிரான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வைரலாகி வரும் வீடியோவில், ஹமாஸ் வாகனத்தை ஒரு கூட்டம் கூச்சலிட்டு சுற்றி வந்து அந்த பெண்ணின் உடல் மீது காரி உமிழ்வதை பார்க்க முடிகிறது. முதலில் அந்தப் உடல் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் வீரர் உடையது என செய்தி வெளியானது. ஆனால் தற்போது அது ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த ஆதி லோக் என்பவரின் உடல் என அவரது தாய் ட்விட்டரில் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஆதி லோக்கின் தாயார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு

3rd card

இசை நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட ஆதி லோக்  

இஸ்ரேலின் கிப்புட்ஸ் உரிம் பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆதி லோக் ஹமாஸ் ஆயுத குழுவினர் நடத்திய தாக்குதலில் சிக்கினார். லோக்கின் குடும்பத்தினர் இஸ்ரேல் மீது ஹமாசின் தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்பு அவரின் வீடியோ வெளியான போது அவரது குடும்பத்தினர் ஆதி லோக் உடலில் இருந்த டாட்டூக்களை வைத்து அவர் தான் என உறுதி செய்தனர். ஆதி லோக் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆதி லோக்கின் தாயார் ஷானி லோக் தன் மகள் குறித்து தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.