இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

இந்தியாவில் எங்குமில்லாத தண்டனை; பிரிட்டிஷாரின் திமிர் வரியை எதிர்கொண்ட கோவை மக்கள்; சுவாரஸ்ய பின்னணி

இந்தியா 78வது சுதந்திர தினத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார்.

மக்களுக்கு மலிவு விலையில் மருந்தகம்; முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் புதிய திட்டம் அறிவிப்பு

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் "முதல்வர் மருந்தகம்" என்ற திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.

பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை; சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.

கொல்கத்தா பலாத்கார வழக்கு; நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறை

அடையாளம் தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத் தளத்தையும், காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இந்திய சுதந்திர தினம்: 11வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார்.

15 Aug 2024

குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பூ ராஜினாமா; தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவிப்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ அறிவித்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டத்திற்குப் பிறகு தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும்; விரிவான வழிகாட்டுதல்

ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியர்கள் அனைவராலும் சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாகாலாந்து மக்கள்; ஏன் தெரியுமா?

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) புதுடெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

சுதந்திர தினம் 2024: பிரதமர் மோடியின் உரையை எங்கே, எப்போது பார்க்க வேண்டும்

இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 இன்று கொண்டாடுகிறது. இது நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்ததைக் குறிக்கிறது.

சமூக நீதிக்கு மோடி அரசின் முன்னுரிமை: நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை கண்ட இடங்கள்

சுதந்திர தினம் என்பது நாட்காட்டியில் உள்ள தேதி மட்டுமல்ல; இந்தியாவின் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடிய வீரர்களையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் நமக்கு நினைவூட்டும் நாள் இது.

சுதந்திர தினம் 2024: தலைநகர் டெல்லியில் துவங்கிய சுதந்திர தின கொண்டாட்டங்கள்

இந்தியா தனது 78 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று துவங்கியது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற கொல்கத்தா மருத்துவமனை சீரமைப்பு பணிகள் 

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவரின் உடல் மீட்கப்பட்ட ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கருத்தரங்கு அறைக்கு அருகில் உள்ள அறையில் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக அரசியல் ரீதியான சர்ச்சை வெடித்துள்ளது.

பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது பெற்றோர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

14 Aug 2024

அயோத்தி

அயோத்தியின் ராமர் மற்றும் பக்தி பாதைகளில் பொருத்தப்பட்டிருந்த 3,800 விளக்குகள் திருட்டு

அயோத்தியில் பக்தி பாதை மற்றும் ராமர் பாதையில் நிறுவப்பட்ட ஆயிரக்கணக்கான விளக்குகள் திருடப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

கனிமங்கள் மீதான ராயல்டி நிலுவைத் தொகையை வசூலிக்க முடியும்: உச்ச நீதிமன்றம்

சுரங்கம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளை அனுமதிக்கும் ஜூலை 25 தீர்ப்பு, ஏப்ரல் 1, 2005க்குப் பிறகு நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்; உதயநிதி மிஸ்ஸிங்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது.

ஒளிபரப்பு மசோதாவின் புதிய வரைவை வெளியிடவுள்ள மத்திய அரசு: விதிகளை திருத்த வாய்ப்பு

உத்தேச ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவின் புதிய வரைவு வெளியிடப்படும் என்று திங்கள்கிழமை அரசாங்கம் அறிவித்தது.

12 Aug 2024

ஐஐடி

NIRF தரவரிசை 2024: பட்டியலில் தொடர்ந்து 6வது வருடமாக முதலிடம் பிடித்த ஐஐடி மெட்ராஸ்

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (என்ஐஆர்எஃப்) தரவரிசை 2024ஐ கல்வி மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இன்று வெளியிட்டார்.

கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா: EPS, ரஜினி, கமலுக்கு அழைப்பு

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய நிதி அமைச்சகம் சார்பாக ₹100 மதிப்புள்ள நாணயம் வெளியிடப்படவுள்ளது.

12 Aug 2024

இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் மின்சாரம்; 30,000 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க உ.பி. அரசு முடிவு

உத்தரப் பிரதேச அரசு, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மேற்கூரை சோலார் பேனல்கள் பொருத்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை அடைவதற்காக 30,000 இளைஞர்களுக்கு சூர்ய மித்ரா என்ற திட்டத்தின்கீழ் பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

12 Aug 2024

செபி

இந்தியாவிற்கு எதிரான காங்கிரசின் அருவருப்பு அரசியல்; ஹிண்டன்பர்க் குறித்து முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து

ஹிண்டன்பர்க் விவகாரம் இந்தியாவில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் பாஜக எம்பியுமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைமுறைக்கு வந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள்: குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை

சென்னையில் வண்டலூர்- கேளம்பாக்கம் பகுதியில் வார இறுதி நாட்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவளித்தது சரிதான்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து

ஷேக் ஹசீனா பங்களாதேஷின் பிரதமராக இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியா உதவாமல் இருந்திருந்தால் அது அவமானமாக இருந்திருக்கும் என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தூதரக அதிகாரியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

11 Aug 2024

இந்தியா

அனைத்து காலநிலையையும் தாங்கி வளரக்கூடிய புதிய பயிர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) 109 அதிக மகசூல் தரும், பல்வேறு தட்பவெப்பத்தைத் தாங்கக்கூடிய மற்றும் உயிரி வலுவூட்டப்பட்ட பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

11 Aug 2024

இந்தியா

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.நட்வர் சிங் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ர் 10) காலமானார். அவருக்கு வயது 93.

லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

உத்தரபிரதேசத்தின் கன்னோஜில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், உருளைக்கிழங்கு என்ற வார்த்தை லஞ்சத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடந்த என்கவுன்டரில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாடு மாவட்டத்திற்கு சென்றார்.

எஸ்டி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு அறிவிப்பு

பட்டியலினத்தவர்கள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) இடஒதுக்கீட்டிற்குள் கிரீமி லேயர் வரையறையை கொண்டுவர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.

பணத்திற்கு ATM தெரியும், அரிசி ஏடிஎம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எப்படி வேலை செய்கிறது

ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களுக்குப் பிறகு, ஒடிசாவில் உள்ள மஞ்சேஷ்வரில் வியாழன் அன்று முதல் 24x7 அரிசி ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது விதிக்கப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

09 Aug 2024

வயநாடு

வயநாடு மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வ பிரியாவிடை: வீடியோ

கடந்த மாதம் கேரள மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வயநாட்டு மக்கள் மனதைக் கவரும் வகையில் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

09 Aug 2024

டெல்லி

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு

கலால் ஊழல் வழக்கில், மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் வியாழக் கிழமை (ஆகஸ்ட் 8) அன்று உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வி படிக்கும் சிறுவர்களுக்கான மாதாந்திர உதவித் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி படிக்கும் ஆண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.