கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா: EPS, ரஜினி, கமலுக்கு அழைப்பு
மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய நிதி அமைச்சகம் சார்பாக ₹100 மதிப்புள்ள நாணயம் வெளியிடப்படவுள்ளது. இதன் விழா வரும் ஆகஸ்ட் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். இந்த விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி, திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.
Twitter Post
நாணயத்தின் சிறப்பம்சங்கள்
கருணாநிதியின் நினைவாக வெளியிடப்பட உள்ள ரூ.100 மதிப்புள்ள நாணயம் 35 கிராம் எடையும், 44 மில்லிமீட்டர் விட்டமும், அதன் விளிம்பில் 200 சீர்களும் இருக்கும். இது 50 சதவிகிதம் வெள்ளி, 40 சதவிகிதம் தாமிரம், 5 சதவிகிதம் நிக்கல் மற்றும் 5 சதவிகிதம் துத்தநாகம் ஆகியவற்றைக் கொண்ட உலோகக் கலவையால் ஆனது. அதன் பின்புறத்தில் கருணாநிதியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு, படத்திற்கு கீழே அவரது கையெழுத்து இருக்கும். நாணயத்தின் வலது புறத்தில் "கலைஞர் எம் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு" என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு, கீழே "1924-2024" என்று எழுதப்பட்டிருக்கும்.