Page Loader
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பூ ராஜினாமா; தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவிப்பு
நடிகை குஷ்பூ பாஜக

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பூ ராஜினாமா; தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2024
07:32 am

செய்தி முன்னோட்டம்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ அறிவித்துள்ளார். முன்னதாக, 2023 பிப்ரவரியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, அரசியலில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வந்த குஷ்பூ, தற்போது தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும், அமைச்சகமும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, 2010இல் கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய குஷ்பூ, அதன் பின்னர் 2014இல் காங்கிரசிற்கு மாறி, 2020இல் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

குஷ்பூவின் எக்ஸ் பதிவு