NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அயோத்தியின் ராமர் மற்றும் பக்தி பாதைகளில் பொருத்தப்பட்டிருந்த 3,800 விளக்குகள் திருட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அயோத்தியின் ராமர் மற்றும் பக்தி பாதைகளில் பொருத்தப்பட்டிருந்த 3,800 விளக்குகள் திருட்டு
    விளக்குகளின் விலை ₹50 லட்சத்துக்கு மேல் இருக்கும்

    அயோத்தியின் ராமர் மற்றும் பக்தி பாதைகளில் பொருத்தப்பட்டிருந்த 3,800 விளக்குகள் திருட்டு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 14, 2024
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    அயோத்தியில் பக்தி பாதை மற்றும் ராமர் பாதையில் நிறுவப்பட்ட ஆயிரக்கணக்கான விளக்குகள் திருடப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    3,800 மூங்கில் விளக்குகள் மற்றும் 36 கோபோ ப்ரொஜெக்டர் விளக்குகள் காணாமல் போயுள்ளதாக விளக்குகளை நிறுவிய யாஷ் எண்டர்பிரைசஸ் மற்றும் கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ் பிரதிநிதி சேகர் சர்மா கூறினார்.

    "மார்ச் 19 வரை, அனைத்து விளக்குகளும் இருந்தன. ஆனால் மே 9 அன்று ஆய்வுக்குப் பிறகு, சில விளக்குகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது" என்று ஷர்மா புகாரில் கூறினார்.

    விவரங்கள்

    ராமர் பாதையில் 6,400 மூங்கில் விளக்குகள் பொருத்தப்பட்டன 

    மொத்தம், 6,400 மூங்கில் விளக்குகள் ராம் பாதையில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 96 ப்ரொஜெக்டர் விளக்குகள் பக்தி பாதையில் நிறுவப்பட்டுள்ளன என சர்மா கூறினார்.

    விளக்குகளின் விலை ₹50 லட்சத்துக்கு மேல் இருக்கும் எனவும் அவர் கூறுகிறார்.

    மே மாதத்தில் தெரு விளக்குகள் காணாமல் போன சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக PTI தெரிவித்துள்ளது; ஆனால், இது குறித்து ஆகஸ்ட் 9ம் தேதி வரை மாநகராட்சி புகார் பதிவு செய்யவில்லை.

    உத்தரபிரதேசத்தில் உள்ள கோவில் நகரமான அயோத்தி, ஜனவரி 22 அன்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விரிவான சீரமைப்புக்கு உட்பட்டது.

    பாதைகள்

    பக்தி பாதை என்பது ராமர் கோயில் செல்லும் சாலை 

    பக்தி பாதை என்பது ஸ்ரீங்கர் காட் மற்றும் ஹனுமான் கர்ஹி மற்றும் இறுதியில் ராமர் கோவிலை இணைக்கும் ஒரு சாலையாகும்.

    742 மீட்டர் நீளமுள்ள இந்த அவென்யூவில் உள்ள கடைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் காவி வண்ணம் பூசப்பட்டுள்ளன.

    கனக் பவன் மற்றும் தஷ்ரத் மஹால் ஆகியவை வழியில் உள்ள முக்கியமான அடையாளங்களாகும்.

    இது சதத்கஞ்சை நயா காட் உடன் இணைக்கும் 13-கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு-வழி நெடுஞ்சாலையான ராம் பாதையை இணைக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அயோத்தி
    ராமர் கோயில்
    கொள்ளை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அயோத்தி

    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் ராமர் கோயில்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன பிரதமர் மோடி
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் பிரதமர் மோடி

    ராமர் கோயில்

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு ரஜினிகாந்த்
    "ராமர் அசைவம் சாப்பிடுபவர்"- தேசியவாத காங்கிரஸின் ஜிதேந்திர அவாத் கருத்தால் வெடித்த சர்ச்சை தேசியவாத காங்கிரஸ் கட்சி
    அரசியல்வாதிகள் முதல் திரைநட்சத்திரங்கள் வரை: ராமர் கோவில் கும்பாபிஷேக விருந்தினர் பட்டியல் அயோத்தி
    தமிழ்நாட்டிலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து வெடித்தது; வைரலாகும் காணொளி  அயோத்தி

    கொள்ளை

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025