Page Loader
இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்
நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 11, 2024
08:43 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.நட்வர் சிங் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ர் 10) காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவால் கடந்த இரண்டு வாரங்களாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இறந்தார். ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சொந்த மாநிலமான டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கேயே திங்கட்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

நட்வர் சிங் காலமானார்

ட்விட்டர் அஞ்சல்

இரங்கல் தெரிவித்தார் பிரதமர் மோடி

வெளியுறவு அமைச்சர்

வெளியுறவுத் துறை அதிகாரி முதல் வெளியுறவு அமைச்சர் வரை 

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் 1931இல் பிறந்த அரச குடும்பத்தில் பிறந்த நட்வர் சிங், வெளியுறவுத் துறை அதிகாரியாக 31 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார். 1984இல் வெளியுறவுத் துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த நட்வர் சிங், 2004-05இல் மன்மோகன் சிங் அரசில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றியுள்ளார். அவர், 'தி லெகசி ஆஃப் நேரு: எ மெமோரியல் ட்ரிப்யூட்' மற்றும் 'மை சைனா டைரி 1956-88' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 'ஒரு வாழ்க்கை போதுமானதாக இல்லை' என்ற பெயரில் ஒரு சுயசரிதையையும் எழுதி வெளியிட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு, தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்றார்.