சுதந்திர தினம் 2024: தலைநகர் டெல்லியில் துவங்கிய சுதந்திர தின கொண்டாட்டங்கள்
இந்தியா தனது 78 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று துவங்கியது. நாடு முழுவதும் இந்த கொடாட்டங்கள் களைகட்ட துவங்கிய நேரத்தில், தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் துவங்குகிறது. மோடி தனது உரையின் போது, மத்திய அரசின் அறிக்கை, கொள்கை மற்றும் திட்ட அறிவிப்புகளை முன்வைப்பார். அதற்கு முன்னதாக நேற்று இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி- வாகா பார்டரில் பீட்டிங் ரெட்ரீட் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொள்ள 6000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்
சுதந்திர தின விழாவைக் காண 6,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பழங்குடியினர் சமூகம், விவசாயிகள், பெண்கள், ஆஷா பணியாளர்கள், செவிலியர் மருத்துவச்சி, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் விழாவைக் காண உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியக் குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. - பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து கிட்டத்தட்ட 2,000 பேர் பாரம்பரிய உடை அணிந்து பிரமாண்ட விழாவில் கலந்துகொள்வார்கள்.
இன்றைய நிகழ்ச்சி நிரல்
பிரதமர் மோடியை, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்பு (MoS)சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே ஆகியோர் வரவேற்பார்கள். பின்னர், கார்டு ஆஃப் ஹானரை பிரதமர் ஆய்வு செய்வார். அக்குழுவில் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த தலா ஒரு அதிகாரி மற்றும் 24 பணியாளர்கள் இருப்பர். அதனைத்தொடர்ந்து பிரதமர் செங்கோட்டைக்கு செல்வார். அங்கே ஜெனரல் ஆபீசர் கமாண்டிங், டெல்லி ஏரியா லெப்டினன்ட் ஜெனரல் பவ்னிஷ் குமார், தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்காக பிரதமரை மேடைக்கு அழைத்துச்செல்வார். லெப்டினன்ட் சஞ்சீத் சைனி, தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு உதவுவார். 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, கொடியை பிரதமர் ஏற்றுவார்.
பிரதமர் உரை
தேசியக் கொடி ஏற்றப்பட்டவுடன், லைன் ஆஸ்டர்ன் ஃபார்மேஷனில் உள்ள இந்திய விமானப்படையின் இரண்டு மேம்பட்ட இலகுரக துருவ் ஹெலிகாப்டர்கள் மூலம் தேசிய கோடிக்கு மலர் இதழ்கள் தூவப்படும். அதனைத் தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அவரது உரையின் முடிவில், தேசிய கேடட் கார்ப்ஸின் (NCC) கேடட்கள் தேசிய கீதத்தைப் பாடுவார்கள். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 2,000 கேடட்கள் (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை) கொண்டாட்டங்களில் பங்கேற்பர்.