தேர்தல்: செய்தி
தமிழ்நாடு தேர்தல் 2026: ஏப்.10 முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் - தேர்தல் ஆணையம்!
தமிழ்நாடு 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி மற்றும் வரிசை எண்குறித்த தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) விநியோகிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கிய திருமாவளவன்: விசிக தொண்டர்கள் அதிர்ச்சி; திடீர் முடிவின் பின்னணி என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன் எடுத்துள்ள ஒரு முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு: திமுக கூட்டணிக்கு மீண்டும் மெஜாரிட்டி? எடப்பாடி மற்றும் விஜயின் நிலை என்ன?
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லோக் போல் ஏஜென்சி நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண் சாதனை! வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலில் தேனி பெண் ரிணி சம்பத் போட்டி
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யின் மேயர் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
"தாயில்லா நிலையை உணர்கிறேன்"; மகன் தவெக வேட்பாளராக மாறிய நிலையில் அதிமுக மூத்த தலைவர் தனபால் உருக்கம்
அதிமுகவின் மூத்த தூண்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் பி.தனபால், தான் 1972 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கத்திற்காக ஆற்றிய பணிகளைத் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது; அண்ணாமலை போட்டியிடவில்லை; 27 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியல்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு பின்னடைவா? பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
திமுகவில் புதிய அதிரடி; முதல்வரின் மருமகன் சபரீசன் நேரடி அரசியல் வருகை
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், இதுவரை திரைக்குப் பின்னால் இருந்து திமுகவின் தேர்தல் உத்திகளை வகுத்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாகத் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு.. இனி காத்திருக்கத் தேவையில்லை! ஏப்ரல் 16இல் கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்
இந்திய அரசியலில் நீண்ட காலமாகக் காத்திருப்பில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில், மத்திய அரசு வரும் ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டியுள்ளது.
தேர்தல் முடிந்ததும் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படக்கூடும்
விஜய் நடிப்பில் , பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்படம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் திரைக்கு வரக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு; சென்னையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது ஏன்?
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மிகவேகமாக நகர்ந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கை மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஸ்டாலின், விஜய், சீமான்; எதிர்த்து நிற்பது யார்?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விறுவிறுப்பு இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) காலை 11 மணி முதல் தொடங்குகிறது.
2026 தேர்தல் களம்: அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசிய முதலமைச்சர்! 'ஸ்டாலின் மாடல்' 2.0 திட்டம்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 29, 2026) வெளியிட்டார்.
விஜய்க்கு முன் தமிழக அரசியல் வரலாற்றில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர்கள் யார்?
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமல்லாமல், இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பிளவு: 70 தொகுதிகளில் தனித்துப் போட்டி - டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலின், உதயநிதியை எதிர்க்கப்போவது யார்? முழு விவரம்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவிருக்கும் 17வது சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியல் 2026: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி; கரூரை விட்டு வெளியேறிய செந்தில் பாலாஜி
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தான் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தவெக தலைவர் விஜய்? மார்ச் 30இல் வேட்புமனுத் தாக்கல் என தகவல்
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஒத்திவைப்பு: விஜய் எடுத்த அதிரடி முடிவுக்கான பின்னணி என்ன?
தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் நாளை நடத்தவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கடமை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்களது வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்கான முக்கியமான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மார்ச் 28 முதல் விஜய்யின் அதிரடி பிரசாரம்: பெரம்பூர் முதல் விருகம்பாக்கம் வரை தவெக 'ரூட் மேப்'
தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது முதல் கட்டப் பிரசாரத்தை மார்ச் 28 சென்னையில் தொடங்குகிறார்.
மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுத்து செல்வதற்கு வாட்ஸ்-அப் ஆதாரம் போதும்: தேர்தல் ஆணையர் விளக்கம்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்வதில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - யாருக்கு வாய்ப்பு.. முழு விவரம்!
அதிமுக வேட்பாளர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் 20 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் பொதுச்செயலாளர் இபிஎஸ் போட்டியிடுகிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட் மறுப்பு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில், அதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியே பாஜகவின் பி-டீம் தான்! கேரள முதல்வர் கடும் விமர்சனம்
கேரளா சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.
புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் யார் யார்? 9 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியானது
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது 9 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சனிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்டுள்ளது.
வடகொரியா தேர்தல் 2026: 99.93% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி! அந்த 0.07% பேர் யார்?
கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது.
வோட்டர் லிஸ்ட்ல பேர் இல்லையா? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 27 கடைசி வாய்ப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் 2026: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மீது தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழக தேர்தல் 2026: அதிமுக - NDA- தவெக கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழக தேர்தல் தேதி இதுதான்! ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் நாளை வெளியாக வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வரலாற்றில் முதல்முறை! தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு; முழு பின்னணி
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
50 சீட்டுடன் துணை முதல்வர் பதவி: ஆந்திரா ஃபார்முலாவுடன் விஜயை இணைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி கடைசி கட்ட முயற்சி?
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
'அன்னபூரணி சூப்பர் 6 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் வரை!' பெண்களைக் கவர விஜய் வெளியிட்ட மெகா தேர்தல் வாக்குறுதிகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
நேபாள பிரதமர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் 35 வயதான ராப்பர் பாலேந்திர ஷா யார்?
பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா, 35 வயதான ராப் பாடகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர், நேபாளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பாளராக டெல்லி செல்கிறார் எல்.கே. சுதீஷ்
தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேபாள பொதுத்தேர்தல் 2026: வன்முறை போராட்டங்களுக்கு பிறகு இன்று வாக்குப்பதிவு
நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட வீதி போராட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
முடிவுக்கு வந்த இழுபறி: திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி கையெழுத்தானது.