2026 தேர்தல் களம்: அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசிய முதலமைச்சர்! 'ஸ்டாலின் மாடல்' 2.0 திட்டம்!
செய்தி முன்னோட்டம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 29, 2026) வெளியிட்டார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான 12 பேர் கொண்ட குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திரட்டிய கருத்துகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக தரப்பிலிருந்து வாக்காளர்களைக் கவரும் வகையிலான பிரம்மாண்டமான தேர்தல் வாக்குறுதிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை விரிவுபடுத்தியும், உதவித் தொகைகளை இருமடங்காக உயர்த்தியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி காட்டியுள்ளார்.
மகளிர் மற்றும் சமூக நலத் திட்டங்கள்
கல்வி மற்றும் குழந்தைகள் நலன்
மாணவர்களின் உயர்கல்வி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 1 முதல் 5-ம் வகுப்பு வரை இருந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இனி 8-ம் வகுப்பு வரை விரிவாக்கப்படும். உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும். உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கு மீண்டும் இலவச மடிக்கணினி வழங்கப்படும். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குப் பிணையின்றி ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு
பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு
விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் விவசாயிகளுக்கு மீட்டர்கள் இல்லாத இலவச மின்சாரம் மற்றும் நவீன பம்பு செட்டுகள் வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 1.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 'நியோ டைடல் பூங்கா' அமைக்கப்படும். ரூ.10,000 கோடியில் 15,000 கி.மீ கிராமச் சாலைகள் சீரமைக்கப்படும்.
விவசாயம் மற்றும் கட்டமைப்பு வசதிகள்
ஆன்மீகம் மற்றும் பண்பாடு
புதிதாக 10,000 பேருந்துகள் இயக்கப்படும். 5,000 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் மற்றும் 1,000 கிராமக் கோயில்கள் மறுசீரமைக்கப்படும். சென்னையில் பிரம்மாண்டமான முறையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும். பொள்ளாச்சியில் நவீன நூலகத்துடன் கூடிய 'மொழிப்போர் வரலாற்று காட்சிக்கூடம்' அமைக்கப்படும். இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர்கள் ஏதுமின்றி நவீன மின்சார பம்புசெட்டுகள் வழங்கப்படும் என்றும், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்பதும் முக்கிய அம்சமாகும். 2021-ல் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளின் தொடர்ச்சியாக, இந்த 2026 அறிக்கையும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.