Loading...
அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - யாருக்கு வாய்ப்பு.. முழு விவரம்!
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - யாருக்கு வாய்ப்பு.. முழு விவரம்!

எழுதியவர் Vasuki
Mar 25, 2026
02:03 pm

செய்தி முன்னோட்டம்

அதிமுக வேட்பாளர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் 20 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் பொதுச்செயலாளர் இபிஎஸ் போட்டியிடுகிறார். தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர் முதற்பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி இன்று (25.3.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலினையின் படி, ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் 23 முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எடப்பாடி தொகுதியில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார். இவரைத் தொடர்ந்து, கழகத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு இந்த முதற்பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

எடப்பாடியில் இபிஎஸ் போட்டி

1. எடப்பாடி - எடப்பாடி K. பழனிசாமி

2. வேப்பனஹள்ளி - கே.பி. முனுசாமி

3. திண்டுக்கல் - திண்டுக்கல் C. சீனிவாசன்

4.நத்தம் - நத்தம் இரா. விசுவநாதன்

5.தொண்டாமுத்தூர் - S.P. வேலுமணி

6.குமாரபாளையம் - பி. தங்கமணி

7.ராயபுரம் - D. ஜெயக்குமார்

8. மைலம் - சி.வி. சண்முகம்

9. மதுரை மேற்கு - செல்லூர் K. ராஜூ

10. பாலக்கோடு - K.P. அன்பழகன்

11. நன்னிலம் - R. காமராஜ்

12. வேதாரண்யம் - O.S. மணியன்

13. விராலிமலை டாக்டர் C. விஜயபாஸ்கர்

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு

14. கோவில்பட்டி - கடம்பூர் C. ராஜூ

15. திருமங்கலம் - R.B. உதயகுமார்

16. சிவகாசி - K.T. ராஜேந்திரபாலாஜி

17. மதுரவாயல் - பா. பென்ஜமின்

18. கலசபாக்கம் - 'அக்ரி' எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி

19. திருப்பரங்குன்றம் - V.V. ராஜன் செல்லப்பா

20. பவானி - K.C. கருப்பணன்

21. ஜோலார்பேட்டை - K.C. வீரமணி

22. கரூர் - M.R. விஜயபாஸ்கர்

23. அரியலூர் - தாமரை S. ராஜேந்திரன்

ADVERTISEMENT