LOADING...
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஸ்டாலின், விஜய், சீமான்; எதிர்த்து நிற்பது யார்?
முதல்வர் ஸ்டாலின், விஜய், சீமான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஸ்டாலின், விஜய், சீமான்; எதிர்த்து நிற்பது யார்?

எழுதியவர் Vasuki Ravichandran
Mar 30, 2026
04:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விறுவிறுப்பு இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30, 2026) தொடங்கிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முதல் நாளான இன்றே தங்கள் மனுக்களை தாக்கல் செய்து, தேர்தல் களத்தை அதிரடிப் பிரச்சாரத்துடன் தொடங்கியுள்ளனர்.

வரலாறு

கொளத்தூரில் 4-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தனது ராசியான தொகுதியான கொளத்தூரில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். செம்பியம் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.சாந்தியிடம் தனது மனுவை வழங்கினார். 2011 முதல் தொடர்ந்து 3 முறை இத்தொகுதியில் வென்றுள்ள ஸ்டாலின், தற்போது 4-வது முறையாக இங்குப் போட்டியிடுகிறார். கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணன் மற்றும் தவெக சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் களம் காண்கின்றனர். மனுத் தாக்கல் செய்த கையோடு, முதல்வர் தனது தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்.

முதல் தேர்தல் களம்!

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இன்று வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்தார். முதன்முறையாகத் தேர்தல் களம் காணும் விஜய் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜன், விஜய்க்கு எதிராகப் பெரம்பூரில் தனது 253-வது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். பாமகவின் திலகவதி விஜயை எதிர்த்து பெரம்பூரில் நிற்கிறார் மனுத் தாக்கலுக்குப் பின் தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த விஜய், தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கிடையே தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

Advertisement

 முக்கிய வேட்பாளர்கள்

காரைக்குடியில் சீமான் 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று மனுத் தாக்கல் செய்தார். தனது தாய் மற்றும் மனைவியுடன் வந்து மனுத் தாக்கல் செய்த அவர், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் மனுத் தாக்கல் செய்தார். ஆதவ் அர்ஜுனா, தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா இன்று மனுத் தாக்கல் செய்தார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement