வடகொரியா தேர்தல் 2026: 99.93% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி! அந்த 0.07% பேர் யார்?
செய்தி முன்னோட்டம்
கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாட்டில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் வாக்களித்ததாக அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது. கிம் ஜாங் உன்னுக்கு ஆதரவாக 99.93% வாக்குகள் பதிவாகியுள்ளன. கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்-உம் தனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஆச்சரியமான விஷயமாக, 0.07% பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக அரசு ஊடகம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. 1957க்குப் பிறகு இவ்வளவு பெரிய தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை.
கமெண்ட்
இணையவாசிகளின் கிண்டலான கமெண்ட்கள்
இந்த 0.07% எதிர்ப்பு வாக்குகள் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "அந்த 0.07% பேருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்" என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். "அடுத்த சில நாட்களில் வடகொரியாவின் மக்கள் தொகை 0.07% குறைய வாய்ப்புள்ளது" என மற்றொருவர் கிண்டல் செய்துள்ளார். "அந்த 0.07% பேர் யார் என்ற பெயர் பட்டியலை மட்டும் கிம்மிடம் கொடுத்துவிடாதீர்கள்" என கிம் ஜாங் உன்னின் புகைப்படத்துடன் மீம்கள் வைரலாகி வருகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்படுவார் என்பதால், இது ஒரு ஜனநாயகத் தேர்தல் அல்ல, வெறும் கண்துடைப்பு என்று சர்வதேச பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர். இருப்பினும், மிகச்சிறிய அளவிலான எதிர்ப்பு வாக்குகளை வெளிப்படையாக அறிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.